Friday, November 7, 2025

மிகக் குறைந்த வயதில்...


மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு வாங்கியவர். ஆம் 44 வயதில் இலக்கியத்துக்கான நோபல். 'அந்நியன்' என்ற பிரபல நாவலை எழுதியவர்.
ஆல்பர்ட் காம்யூ (Albert Camus)... இன்று பிறந்த நாள்.
சொன்னவை சுவையானவை...
‘ஆனந்தத்தில் என்ன அடங்கியிருக்கிறது என்று ஆராய்ந்தால் உன்னால் ஒரு போதும் ஆனந்தப்பட முடியாது, அதுபோல் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடிக்கொண்டிருந்தால் வாழ முடியாது.’
‘நட்பு பெரும்பாலும் காதலில் முடியும். ஆனால் காதல் ஒரு போதும் நட்பில் முடிவதில்லை.’
‘உண்மையைத் தேடுவது வேறு; பிடித்ததை தேடுவது வேறு.’
‘வாழ்வின் மேல் விரக்தி ஏற்படாமல் வாழ்வின் மேல் பிரியம் ஏற்படுவது இல்லை.’
‘உன் மகிழ்ச்சியை உனக்குள் கண்டுபிடி.’
‘எங்கே நம்பிக்கையற்று போகிறோமோ அங்கே அதை நாம் உருவாக்க வேண்டும்.’
'என் பின்னால் நடக்காதே. நான் வழிகாட்டப் போவதில்லை. என் முன்னே நடக்காதே. உன்னை நான் தொடரப் போவதில்லை. பக்கத்தில் நட, ஒரு நண்பனாக!'
‘வளைந்து கொடுக்க முடிகிற இதயங்கள் வரம் பெற்றவை. ஒருபோதும் ஒடிக்க முடியாது அவற்றை.’
‘எதையுமே கொடுக்காதவரிடம் எதுவுமே இல்லை. மிகப் பெரும் துயரம் என்பது நேசிக்கப்படாமல் இருப்பது அல்ல; நேசிக்காமல் இருப்பது.’
‘நம் அன்புக்குரிய ஒருவரின் முகத்தில் ஆனந்தத்தின் ஒளியை ஓரு முறை பார்த்து விட்டால், தன்னைச் சுற்றி உள்ளவர்களின் முகங்களில் ஒளி ஏற்படுத்துவதை விட வேறு வேலை நமக்கு இல்லை என்பது புரிந்து விடும்.’
>><<

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!