Friday, November 7, 2025

இரண்டு முறை...


’நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி
நோபல் பரிசை இரண்டு முறை பெற்ற ஒரே பெண்மணி
நோபல் பரிசை அறிவியலின் இரண்டு துறைகளில் பெற்ற ஒரே நபர்.
மேரி க்யூரி (Marie Curie)... இன்று பிறந்த நாள்!
‘ரேடியம் கண்டுபிடிக்கப்பட்ட போது அது மருத்துவமனைகளில் உபயோகமாகும் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அறிவியலின் ஒரு வேலையாகவே அது நடந்தது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நேரடி உபயோகம் என்ற கோணத்தில் பார்க்கக் கூடாது. அறிவியலின் ஓர் அழகு என்று அதை உருவாக்க வேண்டும். பின்னர் அது மனித குலத்துக்கு பிரயோஜனமாக அமைந்துவிடலாம், ரேடியத்தைப் போல.’ என்றார்.
புகழினால் சற்றும் பாதிக்கப்படாத ஒரே பிரபல விஞ்ஞானி என்று ஐன்ஸ்டீன் வியந்த கியூரியஸ் பெண்மணியான க்யூரி சொன்னது: ‘என் வாழ்நாள் முழுவதும் இயற்கையின் இனிய தரிசனங்கள் என்னை ஓர் குழந்தையைப்போல குதூகலிக்கச் செய்துள்ளன.’
‘இந்த வாழ்வில் எந்த விஷயமும் பயப்படுவதற்கானது அல்ல; புரிந்து கொள்வதற்கானது.’
‘முன்னேற்றத்திற்கான பாதை விரைவானதுமல்ல; எளிதானதுமல்ல.’
‘அறிவியலில் விஷயங்களைப் பற்றி ஆர்வமே முக்கியம், நபர்களைப் பற்றிய ஆர்வம் அல்ல.’
‘எதுவரையில் நடந்துள்ளது என்று நான் பார்ப்பதில்லை, என்ன செய்ய வேண்டியது பாக்கி இருக்கிறது என்று மட்டுமே பார்க்கிறேன்.’
‘தனிமனிதரை முன்னேற்றாமல் நம்மால் இன்னும் சிறந்த ஓர் உலகை உருவாக்க முடியாது.’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!