Wednesday, November 18, 2015

நல்லதா நாலு வார்த்தை - 56


'வேடிக்கையாக மட்டும் இல்லையென்றால் 
வாழ்க்கை
சோகமாக ஆகியிருக்கும்.'
- Stephen Hawking
('Life would be tragic if it weren't funny.')
><

'மிகச் சிறிய விடை என்பது
அந்த வேலையை செய்து விடுவது.'
-Ernest Hemigway
('The shortest answer is doing the thing.')
><

'உங்கள் பிரசினைகளை 
உரைக்காதீர் மற்றவரிடம்:
எண்பது சதவீதத்தினருக்கு
அக்கறையில்லை அதில்;
மீதி இருபதினருக்கோ
உமக்கவை இருப்பதில் மகிழ்ச்சி.'
- Lou Holtz
('Don't tell your problems to people:
eighty percent don't care; and the other
twenty percent are glad you have them.')

><

'தன்னோடிசைந்து வாழ்கிறவன்
பிரபஞ்சத்தோடிசைந்து வாழ்கிறான்.'
- Marcus Aurelius
('He who lives in harmony with himself 
lives in harmony with the universe.')
><

'வாழ்வைக் கடைந்தால் 
வருவது சில கணங்களே
அவற்றில் ஒன்று இக்கணம்.'
- Charlie Sheen
('Life all comes down to a few moments.
This is one of them.')
><

'வலியே வாழ்க்கை - 
எத்தனை ஆழமோ 
அத்தனை சான்று 
அது வாழ்க்கைக்கு.’
- Charles Lamb
('Pain is life - the sharper,
the more evidence of life.')
><

’இயற்கைக் காட்சி நேர்த்தியானது ஆனால் 
மனித இயல்பு இன்னும் நேர்த்தி.'
- John Keats
(’Scenery is fine but human nature is finer.’)
><><><