Sunday, June 30, 2013

அந்த வித்தியாசம்....


அன்புடன் ஒரு நிமிடம் - 38

முதல் நாள்:

எரிச்சல் கொட்டும் முகத்துடன் உள்ளே நுழைந்தான் கிஷோர். சே! மனுஷன் போவானா இந்த மாதவனோட?”

 “என்னடா பண்ணினான் உன் மச்சினன்?”

கம்பெனி விஷயமா கோவை போனேன்ல? அவன் ரூமிலதான் தங்கினேன். சும்மா இருந்தவனை  ஊட்டி போலாமான்னான். திடீர்னு எப்படிடான்னா, எல்லாம் நான் பார்த்துக்கறேன் அப்படீன்னான். பேசாம படுத்து தூங்கு. காலையில கிளம்பறோம்னான். காலையில ஆளைக் காணோம். ட்ரெயின் டைமுக்கு அரை மணி இருக்கும். பரக்கப் பரக்க வந்தவன் டிபன்கூட சாப்பிடாம ஸ்டேஷனுக்கு ஓட வெச்சு... ரயில் ஏதோ பிரசினையில நின்னு  நடுவழியில மூணு மணி நேரம் ஒரு டீ கூட இல்லாம ஊட்டியில போனா ரூம் ஏதும் சொல்லி வெக்கலே இவன். லாட்ஜ் லாட்ஜா அலைஞ்சு நூறு பெற முடியாத ரூமுக்கு ஆயிரம் அழுது... வரும்போ பஸ் டிக்கட்டும் கிடைக்காம நைட் தங்க வேண்டி வந்து மறுநாள் எனக்கு வேலை தடைபட்டு... சரியான கிறுக்கன்! பத்து வயசுப் பையனுக்கு இருக்கிற அறிவு இல்லே இவனுக்கு!

''ஆமா, சுத்த மடையன்தான்! மண்டை நிறைய களிமண்தான் போல!

தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தான். அவரும் ஆமோதித்துக் கொண்டே இருந்தார்.

இனி இந்தப் பயல் எங்கேயாச்சும் பிளான் கிளான் போட்டான்னா பத்து கிலோமீட்டர் ஓடிப் போயிடணும்!

நூறு! என்றார் அவர்.

ற்றொரு நாள். 

வரும்போதே திட்டிக் கொண்டு வந்தான். அதே மாதவனை! சே இவன்லாம் ஒரு மச்சினன்! கேவலமாயிருக்கு!

என்னடா இப்ப?”

இந்தப் பயலுக்குப் போய் உதவி பண்னினேன் பாருங்க! வீடு கட்ட சரியான ஆள் இல்லேன்னு புலம்பினான். எனக்கு தெரிஞ்ச காண்ட்ராக்டரை சொன்னேன். டர்ம்ஸ் பேசிக்கோ, அட்வான்ஸா ரொம்ப விட்டுவைக்காதேன்னு அட்வைஸ் பண்ணித்தான் விட்டேன். இப்ப அவன் சரியா கட்டலியாம். இழுத்தடிக்கிறானாம். பணத்தை வேறே வாங்கிட்டானாம். என்னை வறுத்தெடுக்கிறான். மனுஷனா இவன்? ”

அடடே அப்படியா சொல்றான்?”

ரொம்ப மட்டமா பேசிட்டான். கூறு கெட்ட பயல். போடா, இனி என் மூஞ்சியில முழிக்காதேன்னு சொல்லிடப் போறேன்! கோபத்தின் உச்சியில் இருந்தான்.

விடுடா. ஏதோ தெரியாம சொல்லிட்டான்!

என்ன அவனுக்கு வக்காலத்து வாங்கறீங்க? அவன் சகவாசமே வேணாம்! என்ன நினைச்சிருக்கான் மனசில?”

சரி விடு. பணத்தை கொடுத்துட்டு பதைபதைப்பில இருக்கிறப்ப பதமாவா பேசுவாங்க?
உன்கிட்டேதானே ஆத்திரத்தைக் கொட்டமுடியும்? நான் அவனைக் கேட்கிறேன் நீ ஏதும் வார்த்தைகளை விடாதே.

ரொம்ப முயன்றார் அவனை சமாதானப் படுத்த. சரியாக ரெண்டு மணி நேரம் ஆனது அவன் தான் வந்த மன நிலையை விட்டு வெளிவர.  

அப்புறம் சாவகாசமாக உட்கார்ந்து கேட்டான்: அதிருக்கட்டும். அன்னிக்கு டூர் பிரசினையைச் சொன்னப்ப அவனை அந்த கிழி கிழிச்சீங்க. இன்னிக்கு அதைவிட பெரிய விஷயம்...ரொம்பத் தப்பா பேசியிருக்கான். ஆனா இப்ப அவனை சப்போர்ட் பண்ணறீங்க? ஏன் இந்த முரண்? ஏத்துக்க முடியலே!

அவன் தோளைத் தட்டிக் கொடுத்தார்.

அன்னிக்கு அவன் மேல உனக்கு வந்தது ஒரு எரிச்சல். பிரசினை பெரிசாயிடாது. அந்த எரிச்சலுக்கு வேண்டியது ஒரு வடிகால். அதைத்தான் கொடுத்தேன். கொட்ட விட்டேன். அது அப்படியே கரைஞ்சிட்டது. ஆனா இப்ப உனக்கு அவன் மேல் வந்திருப்பது வெறுப்பு. இதை வளர விட்டா ஆபத்து. ரெண்டு பெருக்குமே நல்லதில்லே. அதனால்தான் தடுத்தேன். அவன் சைடிலும் நியாயம் இருக்கலாம்னு சொன்னேன். என்ன இருந்தாலும் உங்க உறவு நிலையானது. சம்பவங்கள், நடத்தைகள் காயப் படுத்தலாம். ஆனா உறவுக்குப் பங்கம் வரக் கூடாது. அந்தப் பொறுப்போடதான் நான் நடந்துக்கிட்டேன். இதில என்ன முரண்?”


இல்லைதான் மாமா!

('அமுதம்' மார்ச் 2013 இதழில் வெளியானது)
<<>>
(படம்- நன்றி: கூகிள் )

Wednesday, June 26, 2013

நல்லதா நாலு வார்த்தை... 10


ரு மனிதரிடையே இருக்கும் 
மிகக் குறைந்த தூரம்,
ஒரு புன்னகை. 
- Victor Borge 
(‘The shortest distance between two
people is a smile.’)

 <<>>

என்றும் தளர்வறியாத 
ஒன்று நேர்மை.
-Waylon Jennings
(‘Honesty is something you can’t wear out.’)

 <<>>

வாழ்வில் எதுவுமே
அஞ்சத் தக்கதல்ல,
புரிந்துகொள்ளப்பட
வேண்டியதே.
-Marie Curie
(‘Nothing in life is to be feared,
it is only to be understood.’)
           
<<>>

ஆப்பிள் தோட்டமொன்றை

எங்கோ தன் இதயத்துள்

செருகி வைத்திராத மனிதர்

ஆருமில்லை எனலாம்.

- Christopher Morley

(‘We suppose there is hardly a man who has not an

apple orchard tucked away in his heart somewhere.’)

 

அறியாமை துணிகிறது,

அறிவு

அடக்கி வாசிக்கிறது.

-Thucydides


(‘Ignorance is bold, and knowledge reserved.’)

<<>>

விருந்தின்போது
சாப்பிட வேண்டியது
விவரமாக,
மிக்க அதிகமாக அல்ல;
பேச வேண்டியது
அதிகமாக,
மிக்க விவரமாக அல்ல.
-Somerset Maugham
(‘At a dinner party we should eat wisely, but not too well
and talk well, not too wisely.’)

<<>>

சில வேளைகளில் நம்
வாயை மூடிக்கொண்டு
அறிவிலியோ இவரென
அடுத்தவரை மயங்க விடுவது
வாயைத் திறந்து அதில்
ஐயமின்றிச் செய்வதை விட மேல்.

- James Sinclair
(‘At times, it is better to keep your mouth
shut and let people wonder if you’re a fool
than to open it and remove all doubt.’)


<><><>

Thursday, June 20, 2013

காட்டாத பக்கங்கள்...




அன்புடன் ஒரு நிமிடம்  37 

சோபாவில் அமர்ந்திருந்தவருக்கு ஐம்பது இருக்கும். டிவியில் ஓ(ஆ)டிக்கொண்டிருந்த கிரிக்கெட்டிலோ டீபாயில் கிடந்த விகடனிலோ அவர் கவனம் செலுத்தவில்லை. குளிக்கும் நேரம் முடிந்து சாத்வீகன் வரும் வரை அசையாமல் காத்திருந்த விதமே சொல்லிற்று மனதில் அடைத்து வைத்திருந்த கவலையின் பரிமாணத்தை.

எப்படி இவரை தாத்தா சரிப்படுத்தி அனுப்பப் போகிறார் என்று யோசிக்க ஆரம்பித்தான் அபிஜித்.

எத்தனையோ பிரசினைகளை சந்திச்சிருக்கேன் என் பிஸினஸில். அலசி காரணத்தை சரியாக் கண்டு பிடிச்சிருக்கேன். சரி பண்ணியிருக்கேன். ஆனா இந்த விஷயத்தில என்னால... ஊகூம்! என்ன காரணம்,எங்கே தவறுன்னே தெரியலே. என்று ஆரம்பித்தார்.

சொல்லுங்க.

அசோக் என்னை இப்படி கவிழ்த்துருவான்னு நினைக்கவே இல்லை. என்ன பார்க்கறீங்க? ஆமா. என் மகனைத்தான் சொல்றேன். ரொம்ப கவனம் செலுத்தி அவனை படிக்க வெச்சேன். நான் பண்ற பிஸினஸ் பத்தியெல்லாம் பேசுவேன் அவனிடம்.

, அதிலுள்ள சௌகரியங்களைப் பத்தியெல்லாம் சொல்லுவீங்க இல்லையா?”

சொல்லுவேனா அதை? நான் படற கஷ்டங்களையெல்லாம், சந்திக்கிற பிரசினைகளை எடுக்க வேண்டியிருக்கிற ரிஸ்க்குகளை எல்லாம் நல்லாவே எடுத்து சொல்வேன். எல்லாம் கேட்டுக்குவான். படிச்சு வேலைக்குப் போகிறதில் உள்ள சௌகரியத்தை சொல்லுவேன். அது எத்தனை ஈஸி அண்ட் பெட்டர்னு... படி, நல்ல படின்னு எப்பவும் உற்சாகப் படுத்துவேன். ஆனா அவன் சரியாப் படிக்கலே. அவன் படிச்ச லெவலுக்கு நல்ல வேலை கிடைக்கவும் வழியில்லே.

அப்ப பேசாம வியாபாரத்தில் இறக்கிவிட வேண்டியதுதானே?”

அவனுக்கு அதிலேயும் இண்ட்ரஸ்ட் இல்லே. பிடிக்கலேப்பா என்கிறான். என்னால முடியாதுங்கறான். என்ன பண்றதுன்னே...

ஓஹோ?”

எஸ். படிப்பு வரலேன்னா இருக்கவே இருக்கு பிசினஸ்னு ஒரு மிதப்பு வந்திடக் கூடாதேன்னுதான் அதிலே நேரக்கூடிய எல்லா கஷ்டங்களையும் எடுத்துச் சொன்னேன். ஃபாக்டரியை அண்டவே விட்டதில்லை. படிச்சு வேலைக்கு போவதன் சௌகரியங்களை அழுத்திச் சொல்லுவேன்...

ஸ்டாப், ஸ்டாப்,” இவர் கையை உயர்த்தினார், நீங்க செய்த ரெண்டுமே தப்பு. வியாபாரம் செய்வதில் உள்ள வசதி, கஷ்டம் ரெண்டையும் சொல்லி அதேபோல வேலைக்குப் போவதிலும் சிரமமும் நன்மைகளும் இருப்பதை எடுத்துக் காட்டியிருக்கணும். அப்படி அலசி சொல்லியிருந்தால் எந்தத் துறையிலுமே ரெண்டு பக்கமும் உண்டுன்னு புரிஞ்சிட்டிருப்பான். தானே ரெண்டிலும் உள்ள பிளஸ்ஸும் மைனசும் அலசிப் பார்த்து ஏதாவது ஒன்றில் தன்னை ஈடுபாடுடன் செலுத்தியிருப்பான்... பிஸினஸில் வரும் கஷ்டங்களை மட்டும் எடுத்து சொன்னீங்க. உங்க போதனையிலிருந்து அவன் கற்றுக் கொண்டது வியாபாரத்திலுள்ள கஷ்டங்களை அல்ல, எந்த விஷயத்திலும் நெகட்டிவ்களை தேடிக் கண்டு கொள்வது எப்படி என்கிறதைத்தான்!

இப்பதான் எனக்குப் புரியுதுங்க அது! என்ன பண்றது இனிமேல்?”

ஒண்ணுமே பண்ணாதீங்க! ஹாய்யா இருங்க. அதான் வழி!

என்னது?” அபிஜித்துக்கும் ஆச்சரியம்.

எஸ். உங்களைப் பொறுத்தவரை பிசினசைத் தேர்ந்தெடுத்தீங்க. அதில் வர்றதை ஏற்றுக் கொண்டீங்க. அதை அவனுக்குக் காட்டுங்க. கஷ்டமோ நஷ்டமோ ஒண்ணைத் தேர்ந்தெடுத்தாக வேண்டியதுதான்னு உங்க சொல் மூலம் அல்ல, செயல் மூலமாக தெரிவியுங்க. அவன் கொஞ்சம் யோசிக்கட்டும். நானும் பேசறேன். நம்புவோம். சிந்திப்பான். நல்லது நடக்கும்.

கிளம்புகையில் அவரிடம் வேர்வை வடிந்திருந்தது. அமைதி படிந்திருந்தது.
<<<>>>
('அமுதம்' மார்ச் 2013 இதழில் வெளியானது)


Saturday, June 15, 2013

நல்லதா நாலு வார்த்தை.... - 9


ப்படியொன்றும்
அவதியல்ல
வாழ்க்கை,
அதிலிருந்தொரு கவிதை
வெளிவருகையில்.
.
- A. L. Rowse
(‘Life isn’t all misery when out of it comes poetry.’)

 *
வெல்லக் கடினமான
விவாதம், மௌனம்!

- Josh Billings
(‘Silence is one of the hardest arguments to refute.’)

* 

மிக மோசமாய் தம் நேரத்தை 
பயன்படுத்துவோரே அதன் 
மிகக் குறைவான அளவை 
முதலில் குறை சொல்லுவோர்.

- Jean de La Bruyere
(‘Those who make the worst use of their time 
are the first to complain of its shortness.’)

 *
'கவிதை என்பது ஓர் 
வாசனைத் திரவியம் போல 
அழகின் சாற்றை நம் 
அகங்களில் பதித்து,
அறவே மறைந்திடுவது.' 

- Jean Paul Richter

('Poetry is like a perfume which on evaporation 
leaves in our souls the essence of beauty.')

 *
ஒருவரை நேசிப்பதென்பது 
கடவுள் அவரைப் 
படைத்த விதமாய் 
பார்ப்பது.

- Feodor Dostoevsky

(‘To love someone means to see him as God intended him.’)

*
எவர் முன் 
என் எண்ணங்களை 
வாய்விட்டு சிந்திக்க முடியுமோ 
அவரே நண்பர். 

- Emerson. 
(‘A friend is one before whom I may think aloud.’)

*
மற்றொருவர் பாதைக்கு 
வெளிச்சம் ஊட்ட 
விளக்கேந்த முடியாது,
நம் பாதை 
பிரகாசமடைவதைத் தவிர்த்து. 

- Ben Sweetland
(‘We can not hold a torch to light another’s path 
without brightening our own.’)


 ***
(படம்- நன்றி: கூகிள்)

Monday, June 10, 2013

மனப் பின்னணி...

அன்புடன் ஒரு நிமிடம் - 36



ம்பா கிஷோர், உங்க டீமில் இருந்த விபின்கிற பையனை வேறே ப்ராஜெக்டுக்கு மாத்திட்டாங்களாமே?”

பாதி சரி.... அதாவது மாத்த இருந்தாங்க.

என்ன ஆச்சு?”

உத்தம், எங்க பி.எல், அவசரப்பட்டு எம்.டிக்கு மெயில் அனுப்பிட்டார்.

ஏன்?”

விபின் அவுட்புட் சரியாக் கொடுக்கலே.

சொல்லிப் பார்த்தாரா?”

ஆமா.

சரியாகினானா?”

இல்லே. அவனால முடியலே.

சரிதானே அப்ப?”

இல்லே மாமா! விபின் திறமையான சின்ஸியரான ஆள். ஏன் அவன் அப்படி பின் வாங்கறான்னு கொஞ்சம் யோசிக்கணும்’”

அது அவருக்குத் தெரிஞ்சுதா?”

எனக்குத் தெரிஞ்சது.

என்ன இருந்தது அப்படி?”

விபின் அப்பதான் ஸீயில் ஒரு கோர்ஸ் அட்டென்ட் செய்திட்டிருந்தான். இந்த பிராஜெக்ட் ஜாவாவில் ஓடிட்டிருக்கு. நேச்சரலி இங்கே கொஞ்சம் slow, if not confuse ஆகும். லேசா முழிப்பான். ஆனா எப்படியும் சுதாரிச்சுருவான், கொஞ்சம் டைம் தந்தால்! எதுவானாலும் இந்த நேரத்தில் அவன் பர்ஃபாமன்ஸை மற்ற அவன் டீம் மேட்ஸுடன் ஒப்பிடக் கூடாது. ஏன்னா அவனே தன்னை கம்பேர் செய்து அதை சரி செய்ய முயற்சி பண்ணிட்டிருப்பான். எரிச்சல்தானே வரும் அப்ப? வந்தது. இன்னும் கஷ்டப்பட்டான். மேலும் டிலே ஆச்சு.

இவரு சீறிட்டாராக்கும்?”

இவர் மேலேயும் தப்பில்லே. இந்த ப்ராஜெக்ட், எம்டியிடம் இவர் கேட்டு வாங்கினது. தயங்கித் தயங்கி அவர் கொடுத்தது. ஏன்னா நியூ கிளையண்ட்! கம்பெனி பெருசு! ஸோ, பாஸ் இதில ஒரு நாள் தாமதமானாலும் டென்ஷனாயிடுவாரு.

, நீ இப்ப சொல்றது எம்.டியின் பின்னணி?”

ஆமா. உடனடியா ஒரு வேலை பண்னினேன்.

? உத்தம்கிட்ட விஷயத்தை எடுத்து சொன்னியாக்கும்?”

நோ. அப்படி சொன்னால், அதை அவர் கௌரவப் பிரசினையாகப் பார்த்துட்டா அதை சரி செய்யறது இன்னும் கஷ்டம். அதனால அதைப் பத்தி மூச்சு விடலே. நான் பார்த்துக்கறேன்னு அஷ்யூர் பண்னினேன். ரெண்டு நாள் லேட் நைட்ல உக்கார்ந்து விபினுக்கு சப்போர்ட் செய்தேன். படிப்புக்கு ரெண்டு நாள் லீவ் விடச் சொன்னேன். கிளையண்டிடம் அவங்க லாஞ்ச்சிங் டேட்ஸ் பத்தி விரிவாகக் கேட்டதில் டெமோவுக்கு அவங்க ஒரு நாள் தாமதமாத்தான் வரமுடியும்னு தெரிஞ்சது... ஆக எல்லாத்தையும் எப்படியோ சரி பண்ணிட்டேன்னு வையுங்களேன்.

புரிஞ்சது. இதுல நான் அதிசயிக்கிற விஷயம், எல்லாருடைய மனப் பின்னணியையும் சூழ்நிலையையும் பத்தி நீ தெளிவாய் யோசித்ததுதான்.

அஃப்கோர்ஸ். அது என் பழக்கம்.

பழக்கம்? அப்படி நான் நினைக்கலே. ரொம்ப அவசியப்பட்டதால் மட்டுமே செய்தேன்னு நினைக்கிறேன்.

“ஏன் மாமா?”

பழக்கம் என்றால் அது உன் சம்பந்தப்பட்ட எல்லார் விஷயத்திலும் எப்பவும் இயல்பாய் வெளிப்படணும் இல்லையா? போன மாசம் யாழினி அவள் அக்கா வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு ஒரு சிம்னி பிரசண்ட் பண்ண சொன்னபோது அவங்க உங்களுக்கு செய்த லெவலுக்கு இது டூ மச்னு மறுத்திட்டியே? நீங்க செய்யறது உங்க லெவலைத்தான் காட்டுவதாக இருக்கணும்னு யாழினி மனசில் நினைச்சிருக்கலாம் இல்லையா? அவளுக்கு பிடிச்ச அருணா சாய்ராம் கச்சேரிக்கு போகலாம்னு ரெண்டு டிக்கட் எடுத்துட்டு, டைம் கிடைக்கலேன்னு அவளை மட்டும் போக சொன்னியே? தன்னோட ஃபேவரிட்டை உன்னோட சேர்ந்து ரசிக்கணும்கிறது அவள் மனப் பின்னணியாக இருக்கலாம் இல்லையா?...” அடுக்கிக் கொண்டே போனார்.

.நீங்க சொன்னது சரிதான்.

வெளிமுகமா மட்டும் செலுத்துகிற இந்த திறனை கொஞ்சம் உள்முகமாகவும் திருப்பலாமேன்னு தான் சொன்னேன்,” என்று விளக்கியவர், அவளிடமும் எடுத்து சொன்னேன்,”.என்றார்.

யாழினியிடம் என்ன சொன்னீங்க?


உன் கவனம் அந்த ரீதியில் போகாமல் இருந்திருக்கலாம் என்று உன் மனப் பின்னணியையும்!

<<>>
('அமுதம்' மார்ச் 2013 இதழில் வெளியானது)

Friday, June 7, 2013

நல்லதா நாலு வார்த்தை... 8


மேதைமையின் நிஜ
அறிகுறி
அறிவாற்றல் அல்ல,
கற்பனா சக்தி.
- Albert Einstein
(‘The true sign of intelligence
is not knowledge but imagination.’)

<> 

நேசிக்கும் நெஞ்சமே
நிஜமான விவேகம்.

- Charles Dickens
(‘A loving heart is the truest wisdom .’)

<>

'துணிவின் அளவில்
விரியும், சுருங்கும்
வாழ்க்கை.'

-Anais Nin
(‘Life shrinks or expands in proportion to one’s courage.’)

<>           

'பல்வேறு திட்டங்கள் தீட்டி
பலமாக உழைக்கையில்
நமக்கென்ன நிகழ்கிறதோ
அதுவே வாழ்க்கை.

-Allen Saunders
(‘Life is what happens to you while you’re 
busy making other plans.’)

 <>

ராது மீண்டும் என்பதே
வாழ்வின் சுவை!

- Emily Dickinson
(That it will never come again is what makes life so sweet.’)

<>

ற்பனா சக்தியை தம்
ஞாபக சக்தியென
கருதும் மனிதர்
அநேகர்.

-Josh Billings
(‘There are lots of people who mistake their 
imagination for their memory.)

 <>

நேற்றைய சிராய்ப்புகள் மேல்
நாமணியும் உற்சாக உடை
நம்பிக்கை.

-Benjamin De Casseres
(‘Hope is the gay, skylarking pyjamas
we wear over yesterday’s bruises.’)

<<<<>>>>
( படம்- நன்றி: கூகிள் )