‘மேதைமையின் நிஜ
அறிகுறி
அறிவாற்றல்
அல்ல,
கற்பனா சக்தி.’
- Albert Einstein
(‘The true sign of intelligence
is not knowledge but imagination.’)
<>
‘நேசிக்கும்
நெஞ்சமே
நிஜமான
விவேகம்.’
- Charles Dickens
(‘A loving heart is the truest wisdom .’)
<>
'துணிவின் அளவில்
விரியும், சுருங்கும்
வாழ்க்கை.'
-Anais Nin
(‘Life shrinks or expands
in proportion to one’s courage.’)
<>
'பல்வேறு திட்டங்கள் தீட்டி
பலமாக உழைக்கையில்
நமக்கென்ன நிகழ்கிறதோ
அதுவே வாழ்க்கை.
-Allen Saunders
(‘Life is what happens to you while you’re
busy making other
plans.’)
<>
‘வராது
மீண்டும் என்பதே
வாழ்வின் சுவை!’
- Emily Dickinson
(‘That it will never come again is
what makes life so sweet.’)
<>
‘கற்பனா சக்தியை தம்
ஞாபக சக்தியென
கருதும் மனிதர்
அநேகர்.’
-Josh Billings
(‘There are lots of people who mistake their
imagination for their memory.)
‘நேற்றைய சிராய்ப்புகள் மேல்
நாமணியும் உற்சாக உடை
நம்பிக்கை.’
-Benjamin De Casseres
(‘Hope is the gay, skylarking pyjamas
we wear over yesterday’s
bruises.’)
<<<<>>>>
( படம்- நன்றி: கூகிள் )
9 comments:
பகிர்வும் மொழிபயர்ப்பும் மிக அருமை
தேர்ந்தெடுத்த பொன் மொழிகள்
அத்தனையும் மிக மிக அருமை
கவித்துவமான மொழிபெயர்ப்பு மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
அத்தனையும் முத்துக்கள் அறிவார்ந்த சொத்துக்கள்
மிகவும் பிடித்தது :
வராது மீண்டும் என்பதே...
வாழ்வின் சுவை...!
வராது மீண்டும் என்பதே
வாழ்வின் சுவை!’
அருமையான பழமொழி
அய்யா
//‘வராது மீண்டும் என்பதே வாழ்வின் சுவை!’// ;)))))
சுவையான பதிவு. பாராட்டுக்கள்.
அருமையான பொன்மொழிகள். தமிழாக்கத்துக்கு நன்றி.
நாலு வார்த்தை சொன்னாலும் நல்லதா இல்ல சொல்லி இருங்கிங்க.. அருமையா கேட்டுக்கிறோம்!
/ நேற்றைய சிராய்ப்புகள் மேல்
நாமணியும் உற்சாக உடை
நம்பிக்கை.’// - ரொம்ப பிடிச்ச நல்ல நாலு வார்த்தை..
// ‘வராது மீண்டும் என்பதே
வாழ்வின் சுவை!’//
எத்தனை ஒரு பெரிய விஷயம்..... சிறப்பான மொழி பெயர்ப்பு. தொடரட்டும் பகிர்வுகள்...
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!