‘இரு மனிதரிடையே இருக்கும்
மிகக் குறைந்த தூரம்,
ஒரு புன்னகை.’
மிகக் குறைந்த தூரம்,
ஒரு புன்னகை.’
- Victor Borge
(‘The shortest distance between two
people is a smile.’)
‘என்றும் தளர்வறியாத
ஒன்று நேர்மை.’
-Waylon Jennings
(‘Honesty is something you can’t wear out.’)
ஒன்று நேர்மை.’
-Waylon Jennings
(‘Honesty is something you can’t wear out.’)
<<>>
‘வாழ்வில் எதுவுமே
அஞ்சத் தக்கதல்ல,
புரிந்துகொள்ளப்பட
வேண்டியதே.’
-Marie Curie
(‘Nothing in life is to be feared,
it is only to be understood.’)
<<>>
‘ஆப்பிள்
தோட்டமொன்றை
எங்கோ தன் இதயத்துள்
செருகி வைத்திராத மனிதர்
ஆருமில்லை எனலாம்.’
- Christopher
Morley
(‘We suppose there is hardly a man who has not an
apple orchard tucked away in his heart somewhere.’)
‘அறியாமை
துணிகிறது,
அறிவு
அடக்கி வாசிக்கிறது.’
-Thucydides
(‘Ignorance
is bold, and knowledge reserved.’)
<<>>
‘விருந்தின்போது
சாப்பிட வேண்டியது
விவரமாக,
மிக்க அதிகமாக அல்ல;
பேச வேண்டியது
அதிகமாக,
மிக்க விவரமாக அல்ல.’
-Somerset Maugham
(‘At a dinner party we should eat wisely, but
not too well
and talk well, not too wisely.’)
<<>>
‘சில வேளைகளில்
நம்
வாயை
மூடிக்கொண்டு
அறிவிலியோ
இவரென
அடுத்தவரை
மயங்க விடுவது
வாயைத் திறந்து
அதில்
ஐயமின்றிச்
செய்வதை விட மேல்’.
- James Sinclair
(‘At times,
it is better to keep your mouth
shut and
let people wonder if you’re a fool
than to
open it and remove all doubt.’)
15 comments:
அனைத்தும் அருமை...
முடிவில் உள்ளதை முதலாவது வென்று விட்டது...
தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...
அனைத்தும் அருமை.
/மிகக் குறைந்த தூரம்,
ஒரு புன்னகை.’ / நினைவில் கொள்ள வேண்டியது.
தொடருங்கள்.
எல்லாமே அருமையான வாசகங்கள்!
The shortest distance between two
people is a smile. - - Victor Borge
நன்றி! உங்கள் பக்கம் நோக்கி எனது புன்னகை! இதோ!
அனைத்தும் அருமை......
ஒவ்வொன்றும் நன் முத்து.
மிக மிக அருமையான மொழிகள்
மொழிபெயர்ப்பும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 4
நல்லதா நாலு வார்த்தை கேட்டாலே அன்றைய தினம் உற்சாகமாகி விடுகிறது.
இரு மனிதரிடையே இருக்கும்
மிகக் குறைந்த தூரம்,
ஒரு புன்னகை.’//
இந்த பொன்மொழி மிகவும் பிடித்து இருக்கிறது.
ஒரு புன்னகை ஒன்று போதும் நட்பு பாராட்ட.
அத்தனையும் அருமை.த.மா.5
அர்த்தமுள்ள பொன்மொழிகள் பத்து! அத்தனையும் முத்து!
முதல் வரியிலேயே நெஞ்சம் மலர்ந்துவிட்டது. பகிர்ந்த அனைத்துமே நினைவில் வைத்துப் போற்றத்தக்க வரிகள். பகிர்வுக்கு நன்றி ஜனா சார்.
புன்னகை நெருக்கட்டும் மனங்களின் இடைவெளிகளை.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!