Monday, June 10, 2013

மனப் பின்னணி...

அன்புடன் ஒரு நிமிடம் - 36ம்பா கிஷோர், உங்க டீமில் இருந்த விபின்கிற பையனை வேறே ப்ராஜெக்டுக்கு மாத்திட்டாங்களாமே?”

பாதி சரி.... அதாவது மாத்த இருந்தாங்க.

என்ன ஆச்சு?”

உத்தம், எங்க பி.எல், அவசரப்பட்டு எம்.டிக்கு மெயில் அனுப்பிட்டார்.

ஏன்?”

விபின் அவுட்புட் சரியாக் கொடுக்கலே.

சொல்லிப் பார்த்தாரா?”

ஆமா.

சரியாகினானா?”

இல்லே. அவனால முடியலே.

சரிதானே அப்ப?”

இல்லே மாமா! விபின் திறமையான சின்ஸியரான ஆள். ஏன் அவன் அப்படி பின் வாங்கறான்னு கொஞ்சம் யோசிக்கணும்’”

அது அவருக்குத் தெரிஞ்சுதா?”

எனக்குத் தெரிஞ்சது.

என்ன இருந்தது அப்படி?”

விபின் அப்பதான் ஸீயில் ஒரு கோர்ஸ் அட்டென்ட் செய்திட்டிருந்தான். இந்த பிராஜெக்ட் ஜாவாவில் ஓடிட்டிருக்கு. நேச்சரலி இங்கே கொஞ்சம் slow, if not confuse ஆகும். லேசா முழிப்பான். ஆனா எப்படியும் சுதாரிச்சுருவான், கொஞ்சம் டைம் தந்தால்! எதுவானாலும் இந்த நேரத்தில் அவன் பர்ஃபாமன்ஸை மற்ற அவன் டீம் மேட்ஸுடன் ஒப்பிடக் கூடாது. ஏன்னா அவனே தன்னை கம்பேர் செய்து அதை சரி செய்ய முயற்சி பண்ணிட்டிருப்பான். எரிச்சல்தானே வரும் அப்ப? வந்தது. இன்னும் கஷ்டப்பட்டான். மேலும் டிலே ஆச்சு.

இவரு சீறிட்டாராக்கும்?”

இவர் மேலேயும் தப்பில்லே. இந்த ப்ராஜெக்ட், எம்டியிடம் இவர் கேட்டு வாங்கினது. தயங்கித் தயங்கி அவர் கொடுத்தது. ஏன்னா நியூ கிளையண்ட்! கம்பெனி பெருசு! ஸோ, பாஸ் இதில ஒரு நாள் தாமதமானாலும் டென்ஷனாயிடுவாரு.

, நீ இப்ப சொல்றது எம்.டியின் பின்னணி?”

ஆமா. உடனடியா ஒரு வேலை பண்னினேன்.

? உத்தம்கிட்ட விஷயத்தை எடுத்து சொன்னியாக்கும்?”

நோ. அப்படி சொன்னால், அதை அவர் கௌரவப் பிரசினையாகப் பார்த்துட்டா அதை சரி செய்யறது இன்னும் கஷ்டம். அதனால அதைப் பத்தி மூச்சு விடலே. நான் பார்த்துக்கறேன்னு அஷ்யூர் பண்னினேன். ரெண்டு நாள் லேட் நைட்ல உக்கார்ந்து விபினுக்கு சப்போர்ட் செய்தேன். படிப்புக்கு ரெண்டு நாள் லீவ் விடச் சொன்னேன். கிளையண்டிடம் அவங்க லாஞ்ச்சிங் டேட்ஸ் பத்தி விரிவாகக் கேட்டதில் டெமோவுக்கு அவங்க ஒரு நாள் தாமதமாத்தான் வரமுடியும்னு தெரிஞ்சது... ஆக எல்லாத்தையும் எப்படியோ சரி பண்ணிட்டேன்னு வையுங்களேன்.

புரிஞ்சது. இதுல நான் அதிசயிக்கிற விஷயம், எல்லாருடைய மனப் பின்னணியையும் சூழ்நிலையையும் பத்தி நீ தெளிவாய் யோசித்ததுதான்.

அஃப்கோர்ஸ். அது என் பழக்கம்.

பழக்கம்? அப்படி நான் நினைக்கலே. ரொம்ப அவசியப்பட்டதால் மட்டுமே செய்தேன்னு நினைக்கிறேன்.

“ஏன் மாமா?”

பழக்கம் என்றால் அது உன் சம்பந்தப்பட்ட எல்லார் விஷயத்திலும் எப்பவும் இயல்பாய் வெளிப்படணும் இல்லையா? போன மாசம் யாழினி அவள் அக்கா வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு ஒரு சிம்னி பிரசண்ட் பண்ண சொன்னபோது அவங்க உங்களுக்கு செய்த லெவலுக்கு இது டூ மச்னு மறுத்திட்டியே? நீங்க செய்யறது உங்க லெவலைத்தான் காட்டுவதாக இருக்கணும்னு யாழினி மனசில் நினைச்சிருக்கலாம் இல்லையா? அவளுக்கு பிடிச்ச அருணா சாய்ராம் கச்சேரிக்கு போகலாம்னு ரெண்டு டிக்கட் எடுத்துட்டு, டைம் கிடைக்கலேன்னு அவளை மட்டும் போக சொன்னியே? தன்னோட ஃபேவரிட்டை உன்னோட சேர்ந்து ரசிக்கணும்கிறது அவள் மனப் பின்னணியாக இருக்கலாம் இல்லையா?...” அடுக்கிக் கொண்டே போனார்.

.நீங்க சொன்னது சரிதான்.

வெளிமுகமா மட்டும் செலுத்துகிற இந்த திறனை கொஞ்சம் உள்முகமாகவும் திருப்பலாமேன்னு தான் சொன்னேன்,” என்று விளக்கியவர், அவளிடமும் எடுத்து சொன்னேன்,”.என்றார்.

யாழினியிடம் என்ன சொன்னீங்க?


உன் கவனம் அந்த ரீதியில் போகாமல் இருந்திருக்கலாம் என்று உன் மனப் பின்னணியையும்!

<<>>
('அமுதம்' மார்ச் 2013 இதழில் வெளியானது)

11 comments:

Ramani S said...

“வெளிமுகமா மட்டும் செலுத்துகிற இந்த திறனை கொஞ்சம் உள்முகமாகவும் திருப்பலாமேன்னு தான் சொன்னேன்,”

மிக மிக அருமையான செய்தி
சொல்லிச் சென்றவிதமும் வழக்கம்போல்
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

,

Ramani S said...

tha.ma 2

கரந்தை ஜெயக்குமார் said...

ஆம் சரிதான் அய்யா, வேலை பார்க்கும் இடத்தில் அக்கறைபோடு செய்யும் சில செயல்பாடுகளை, வீட்டில மறந்து விடுகிறோம். வீட்டிலும் தொடர்ந்தால் மகிழச்சி பொங்கும்தானே,,

கவியாழி கண்ணதாசன் said...

நோ. அப்படி சொன்னால், அதை அவர் கௌரவப் பிரசினையாகப் பார்த்துட்டா அதை சரி செய்யறது இன்னும் கஷ்டம்.//பெரும்பாலானவங்க பிரச்சனையே இப்படித்தான்

வெங்கட் நாகராஜ் said...

அருமை. இப்படி எடுத்துச் சொல்ல ஒருவர் நிச்சயம் வேண்டும்......

திண்டுக்கல் தனபாலன் said...

மனப் பின்னணியை சொன்ன விதம் அருமை... வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...


“வெளிமுகமா மட்டும் செலுத்துகிற இந்த திறனை கொஞ்சம் உள்முகமாகவும் திருப்பலாமேன்னு தான் சொன்னேன்,” என்று விளக்கியவர், “அவளிடமும் எடுத்து சொன்னேன்,”.என்றார்.

சிந்திக்கவைக்கும் அருமையான கதை ..!பாராட்டுக்கள்..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

வித்யாசமான ஆனால் மிகத்தெளிவான மனப் பின்னணி...

பாராட்டுக்கள்.

ராமலக்ஷ்மி said...

/வெளிமுகமா மட்டும் செலுத்துகிற இந்த திறனை கொஞ்சம் உள்முகமாகவும் திருப்பலாமே/ சிந்திக்க வைக்கும் அனைவரையும். நல்ல கதை.

உஷா அன்பரசு said...

//“பழக்கம் என்றால் அது உன் சம்பந்தப்பட்ட எல்லார் விஷயத்திலும் எப்பவும் இயல்பாய் வெளிப்படணும் இல்லையா? // - அருமை!

ரிஷபன் said...

பாசிட்டிவ் ஆன அலசல் !

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!