‘அப்படியொன்றும்
அவதியல்ல
வாழ்க்கை,
அதிலிருந்தொரு கவிதை
வெளிவருகையில்.’
.
- A. L. Rowse
(‘Life isn’t all misery when out
of it comes poetry.’)
*
‘வெல்லக் கடினமான
விவாதம், மௌனம்!’
- Josh Billings
(‘Silence is one of the hardest arguments to
refute.’)
*
‘மிக மோசமாய் தம் நேரத்தை
பயன்படுத்துவோரே அதன்
மிகக் குறைவான அளவை
முதலில் குறை சொல்லுவோர்.’
- Jean de La Bruyere
(‘Those who make the worst use of their time
are the first to complain of its shortness.’)
பயன்படுத்துவோரே அதன்
மிகக் குறைவான அளவை
முதலில் குறை சொல்லுவோர்.’
- Jean de La Bruyere
(‘Those who make the worst use of their time
are the first to complain of its shortness.’)
*
'கவிதை என்பது ஓர்
வாசனைத் திரவியம் போல
அழகின் சாற்றை நம்
அகங்களில் பதித்து,
அறவே மறைந்திடுவது.'
- Jean Paul Richter
('Poetry is like a perfume which on evaporation
leaves in our souls the essence of beauty.')
வாசனைத் திரவியம் போல
அழகின் சாற்றை நம்
அகங்களில் பதித்து,
அறவே மறைந்திடுவது.'
- Jean Paul Richter
('Poetry is like a perfume which on evaporation
leaves in our souls the essence of beauty.')
‘ஒருவரை நேசிப்பதென்பது
கடவுள் அவரைப்
படைத்த விதமாய்
பார்ப்பது.’
- Feodor Dostoevsky
(‘To love someone means to see him as God intended him.’)
கடவுள் அவரைப்
படைத்த விதமாய்
பார்ப்பது.’
- Feodor Dostoevsky
(‘To love someone means to see him as God intended him.’)
‘எவர் முன்
என் எண்ணங்களை
வாய்விட்டு சிந்திக்க முடியுமோ
அவரே நண்பர்.’
- Emerson.
(‘A friend is one before whom I may think aloud.’)
என் எண்ணங்களை
வாய்விட்டு சிந்திக்க முடியுமோ
அவரே நண்பர்.’
- Emerson.
(‘A friend is one before whom I may think aloud.’)
‘மற்றொருவர் பாதைக்கு
வெளிச்சம் ஊட்ட
விளக்கேந்த முடியாது,
நம் பாதை
பிரகாசமடைவதைத் தவிர்த்து.’
- Ben Sweetland
(‘We can not hold a torch to light another’s path
without brightening our own.’)
வெளிச்சம் ஊட்ட
விளக்கேந்த முடியாது,
நம் பாதை
பிரகாசமடைவதைத் தவிர்த்து.’
- Ben Sweetland
(‘We can not hold a torch to light another’s path
without brightening our own.’)
(படம்- நன்றி: கூகிள்)
9 comments:
அருமையான பொன்மொழிகள்
குறித்துவைத்துக் கொண்டேன்
தொடர்ந்து தர வேண்டுகிறேன்
வாழ்த்துக்களுடன்...
tha.ma 2
அவரவர் வெளிச்சம் அவரவர் கையில் தான்.
எல்லாமே சிந்தனைக்குரியது.
'நல்லதா நாலு வார்த்தை' தொகுப்பு நூலாவது எப்போது?
அனைத்தும் அருமை...
மிகவும் பிடித்தது மௌனம்...
நன்றி... வாழ்த்துக்கள்...
அத்தனையும் அருமை.
அருமை. தமிழாக்கம் இனிமை. பாராட்டுக்கள்.
வெல்லக் கடினமான
விவாதம், மௌனம்!’
அருமையான ஆக்கம் ..பாராட்டுக்கள்..!
நல்லதா நாலு வார்த்தை.... அனைத்துமே அருமையான குறிப்புகள்.
அதிலும் மௌனம் குறித்த மொழி மிகவும் பிடித்தது.....
தொடரட்டும் பகிர்வுகள்.
ஒருவரை நேசிப்பதென்பது
கடவுள் அவரைப்
படைத்த விதமாய்
பார்ப்பது.’
அப்படித்தான் இருக்க வேண்டும்
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!