Sunday, December 20, 2015

நல்லதா நாலு வார்த்தை... 59

’அச்சமும் நம்பிக்கையும்
அடியில் ஒரே போன்றதே.’
- Richard Ford
(”Fear and hope are alike underneath.’)
<>

’தோற்கையில் எங்ஙனம் கருதுகிறாயென்பதே நீ
ஜெயித்திட ஆகும் காலத்தைத் தீர்மானிக்கிறது.'
- G K Chesterton
('How you think when you lose determines 
how long it will be until you win.')
<>

'ஏற்றுக் கொள்ளலிலேயே
வீற்றிருக்க முடியும்
மகிழ்ச்சி.'
- George Orwell
('Happiness can exist only in acceptance.')

<>

‘ஒரு வேளை இன்னொரு கிரகத்தின் 
நரகமாக இருக்கலாம், 
இவ்வுலகு.’
-Aldous Huxley
(”Maybe this world is another planet's hell.’)
<>

'உங்களைச் சுற்றி எங்குமிருக்கும் இறைவனைத் 
தேடியபடி வாழத் தொடங்குவீர்களாயின்,
ஒவ்வொரு கணமும் ஒரு பிரார்த்தனை ஆகிறது.'
-Frank Bianco
('If you begin to live life looking for the God
that is all around you, every moment becomes a prayer.')
<>

’அழகைக் காணும் திறனை 
எப்போதும் கையில் வைத்திருக்கும் 
எவருக்கும் வயதாவதில்லை.’
- John Keats
('Anyone who keeps the ability to
see beauty never grows old.')
<>

'ஒருவர் மேல் வைக்கும் நீடித்த அன்பு, 
அமைதியாக எல்லாம் செல்கையில் 
சற்றே ஆடினாலும்,
புயல் வீசிடும்போது
பலம் சேகரித்துக் கொள்கிறது.'
- Claude Roy
('Lasting love for another sometimes shaken
when the going is calm, gathers strength during a storm.')

<><><>

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அழகைக் காணும் திறனை
எப்போதும் கையில் வைத்திருக்கும்
எவருக்கும் வயதாவதில்லை.’

அருமை

ராமலக்ஷ்மி said...

மனதில் கொள்ள வேண்டிய பொன்மொழிகளின் தமிழாக்கம் அருமை. நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//’அழகைக் காணும் திறனை எப்போதும் கையில் வைத்திருக்கும் எவருக்கும் வயதாவதில்லை.’//

மிகவும் சரியே :)

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பொன்மொழிகள்! நன்றி!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!