Monday, December 14, 2015

நல்லதா நாலு வார்த்தை... 58

’வாழ்க்கை வழங்கும் பேரடிகளில் சிலவற்றை 
நகைச்சுவையின் வழியே 
மெலிதாக்கிக் கொள்ளலாம்; 
ஒரு முறை சிரிப்பை கண்டுகொண்டுவிட்டால் 
எத்தனை வேதனையான நிலைமை 

எனினும் உங்களால் மீள முடியும்.’
- Bill Cosby
('Through humour, you can soften some of the worst
blows that life delivers. And once you find laughter,
no matter how painful your situation might be,
you can survive it.')
<>

'எடுத்துக் கொள்வது எது என்பதல்ல 
விட்டு விடுவது எது 
என்பதே நம்மை செல்வராக்குகிறது.'
- Henry Ward Beecher
('It is not what we take up, but what
we give up, that makes us rich.')
<>

'அறியாமையோடுதான் பிறக்கிறோம் 
அனைவருமே, ஆனால் 
முட்டாளாகவே இருப்பதற்கு ஒருவன்
மிகவும் உழைக்க வேண்டும்.’
- Benjamin Franklin
('We are all born ignorant but one must
work hard to remain stupid.')
<>

’எத்தனை திடமானவன் நீ
என்பதை அறியமாட்டாய்
திடமாக இருப்பதொன்றே 
நீ செய்யக் கூடுவதாக 
ஆகாத வரையில்.’
- Bob Marley
(You never know how strong you are
until being strong is your only choice.’)
<>

’உலகில் நீ 
காண விழையும் மாற்றமாக
நீ விளங்கிடு.’
- Mahatma Gandhi
(”Be the change you want to see in the world.’)
<>

’வாசகரை ஒரு வினாடி கூட
நிச்சயமின்மையில் விடக்கூடாது.
தெளிவே எழுத்துக்கு அழகூட்டுவது.' 
- Dezso Kosztolanyi
('You must not - even for a moment - leave the reader 
in uncertainty. Only clarity embellishes writing.')
<>

'தோற்றுக் கொண்டேயிரு.
தொடர்ந்து செய். 
அடுத்த தடவை நல்ல முறையில் 
தோற்க முயல்க.
அவ்வளவுதான்!'
- Samuel Beckett
('Go on failing. Go on. Only next time,
try to fail better.')

<><><>

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//’வாசகரை ஒரு வினாடி கூட நிச்சயமின்மையில் விடக்கூடாது. தெளிவே எழுத்துக்கு அழகூட்டுவது.' //

பொன்பொழிகள் ... நல்லதா நாலு வார்த்தை... 58 இல் தெளிவான இதற்கோர் தனி இடமுண்டு. பாராட்டுகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

ராமலக்ஷ்மி said...

சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள். நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அத்தனை மொழிகளும், மொழிபெயர்ப்பும் சூப்பர்.’வாசகரை ஒரு வினாடி கூட
நிச்சயமின்மையில் விடக்கூடாது.
தெளிவே எழுத்துக்கு அழகூட்டுவது.'
- Dezso Kosztolanyi
('You must not - even for a moment - leave the reader
in uncertainty. Only clarity embellishes writing.')//

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!