204
பரிகசித்து உன் சிரிப்பு
என் கவிதைகளுக்கோ பூரிப்பு.
<>
205
வாழ்வின் எல்லா வருத்தங்களும்
வறண்டு போனது
வசந்தமாய் நீ வந்தபோது.
<>
206
தென்றல் என்னை முந்திக்கொண்டது
உன்னிடம் தோற்பதில்.
<>
207
மனதில் உன் காலடித் தடம் இல்லை
ஆனால் நீ வந்து செல்கிறாய்
ஒவ்வொரு கணமும்.
<>
208
கால் இடறிற்று உனக்கு
நான் கீழே விழுந்தேன்.
<>
209
எவரெஸ்ட் அளவுக்கு
என் ஞாபக சக்தியை அதிகரித்தது
எதுவுமில்லை உன்போல.
<>
210
தேடிக் கொண்டிருக்கிறேன்
நம் சந்திப்பில் நழுவிச்சென்ற
வருடங்களை.
<><><>
9 comments:
சின்ன வரிகளில் மனசை சொந்தம் கொண்டாடி விடுகிறீர்கள்.. அழகாய்.
இரண்டு மூன்று வரிகள் என்றாலும் கருத்துச் செரிவுள்ள வரிகள்.
ரசித்தேன்.....
//208
கால் இடறிற்று உனக்கு
நான் கீழே விழுந்தேன்.//
அடடா .... அருமை ! :)
-=-=-=-=-
{”ஐயா, கதிரு .... அம்மா குதிரு ....” என்று சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். ஒரு வேளை குதிருக்கு கால் இடறி கதிர் மேல் அது சாய, கதிர் கீழே விழுந்திருக்குமோ என நினைத்து நான் எனக்குள் சிரித்துக்கொண்டேன்}
அருமை நண்பரே
அருமை...
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்
எவரெஸ்ட் அளவுக்கு
என் ஞாபக சக்தியை அதிகரித்தது
எதுவுமில்லை உன்போல.
காதலின் வலி(மை)யைச் சொல்லும் கனமான வரி
வாழ்த்துகள் கவிஞரே! தொடருங்கள் தொடர்கிறோம்
அருமை
எவரெஸ்ட் அளவுக்கு ....காதலின் ஆழம்
தேடிக் கொண்டிருக்கிறேன்...
அருமை அருமை...இப்படி ரசிக்கும் படி எப்படி எழுதுகிறீர்கள்
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!