Monday, December 7, 2015

நல்லதா நாலு வார்த்தை... 57


'எத்தனை பரிவை ஊட்டுகிறீர்களோ,
அத்தனை குறைகிறது 
அதன் தேவை உங்களுக்கு!'
- Malcolm Forbes
('The more sympathy you give, 
the less you need.')

<>

மனிதரைவிட மேம்பட்டவை 
மந்திகள் ஒரு விஷயத்தில்:
மந்தி கண்ணாடி பார்க்கையில் ஒரு 
மந்தியைப் பார்க்கிறது.'
- Malcolm de Chazal
('Monkeys are superior to men in this:
when a monkey looks into a mirror,
he sees a monkey.')
<>

'புரிந்து கொள்வதென்பது மன்னிப்பது.
தன்னையே கூட.'
- Alexander Chase
('To understand is to forgive, even oneself.')
<>

'வலியை விளையாட்டாக 
எடுத்துக்கொள்ள வைக்கும்
உள்ளுணர்வே நகைச்சுவை.'
- Max Eastman
('Humour is the instinct for taking pain playfully.')

<>

’ஒரே ஒரு ரோஜா என்
தோட்டமாக இருக்கமுடியும்.
ஒரே ஒரு நண்பன் என்
உலகமாக.'
Leo Buscaglia
('A single rose can be my garden...
a single friend, my world.')
<>

'தன் முந்தைய தலைமுறையைவிட
அறிவாற்றல் கொண்டதாகவும் 
தனக்கு அடுத்த தலைமுறையைவிட
விவேகம் உள்ளதாகவும் 
தன்னை கருதிக் கொள்கிறது
ஒவ்வொரு தலைமுறையும்.’
- George Orwell
('Each generation imagines itself to be more
intelligent than the one that went before it,
and wiser than the one that comes after it.')
<>

’தடுமாறித்தான்
கற்றுக் கொள்கிறோம்
நடக்க.’
- Proverb
(”We learn to walk by stumbling.’)

<><><>

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//’தடுமாறித்தான் கற்றுக் கொள்கிறோம் நடக்க.’//

:) அருமை. உண்மை.

மோகன்ஜி said...

சிந்தனை தூண்டும் மொழிகள்

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கும் வார்த்தைகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராமலக்ஷ்மி said...

அருமையான தமிழாக்கத்தில் அற்புதமான பொன்மொழிகள்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!