Tuesday, June 2, 2015

நல்லதா நாலு வார்த்தை... 47


’வாழ்க்கையை நேசிக்கிறீர்களா?
காலத்தை வீணாக்காதீர்.
காலத்தால் ஆனதன்றோ வாழ்க்கை?' 
- Bruce Lee
('If you love life, don't waste time,
for time is what life is made of.')
<>

'அதிர்ஷ்டத்தை நம்பத்தான் வேண்டும்
வேறெப்படி நமக்குப் பிடிக்காதவரின் 
வெற்றியை விளக்குவது?'
- Jean Cocteau
(‘We must believe in luck. For how else
can we explain the success of those we don’t like?’)
<>

'நிஜமாகவே நீங்கள் படிக்க விரும்பிடும் 
புத்தகம் ஒன்றிருந்து அதை 
இதுவரையில் யாரும் எழுதியிராவிட்டால்
நிச்சயம் அதை நீங்கள் எழுதவேண்டும்.'
- Toni Morrison
('If there's a book you really want to read,
but it hasn't been written yet,
then you must write it.')
<>

’இயற்கையோடான தன் 
ஒவ்வொரு நடையிலும்
தான் தேடுவதைவிட 
மிக அதிகம் பெறுகிறான் ஒருவன்.’
- John Muir
('In every walk with nature one receives
far more than one seeks.')
<>

'விரைந்து தெரிவிக்கும் நன்றி 
வெகு இனிப்பானது.'
- Proverb.
('Swift gratitude is the sweetest.')
<>

’உற்சாகமே வெற்றியின் 
உண்மையான ரகசியம்.’
- Walter Chrysler
(’The real secret of success is enthusiasm.’)
<>

’செய்யக் கற்றுக்கொள்ள வேண்டுவன
செய்தே கற்கிறோம்.’
- Aristotle.
(’What we have to learn to do, 
we learn by doing.)


><><><><

7 comments:

Rekha raghavan said...

அனைத்தும் அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

அனைத்தும் அருமை நண்பரே
தம +1

சென்னை பித்தன் said...

நல்ல வார்த்தைகள் எப்போதும் நன்மைதான்.
நன்றி

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அருமையான கருத்து பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

யாரும் எழுதியிராவிட்டால் - உற்சாகமே வெற்றியின் உண்மையான ரகசியம்...

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் நன்று.

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்துமே நன்றாக உள்ளன......னீங்கள் படிக்க விரும்பும் புத்தகம் யாருமே எழுதியிராவிட்டால், உற்சாகமே வெற்றியின் ..., விரைந்து உரைக்கும் நன்றி....மிக மிக அருமை மொழிகள்

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!