Wednesday, June 17, 2015

அவள் - (கவிதைகள்)

141
நேசம், அன்பு, பாசம் என்று
ஏகமாய் அருகில் கொட்டிக்கிடக்கிறது,
நெருங்க முடியவில்லை உன்னை.

142
 உன்னைத் தாண்டி
நினைப்பைச் செலுத்த முடியாதபடி
குறுக்கே நிற்கும்
உன்னை என்ன செய்வது?

143
அந்த மலருக்கும் உனக்குமான
ஆறு வித்தியாசத்தைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்,
அகப்படவில்லை இன்னும் 
ஒன்றும்.

144
உன்னிலிருந்து கவிதை பிறந்தது
புதிதாக.
அந்தக் கவிதையிலிருந்து நான் பிறந்தேன்
புதிதாக.

145
மனம் பாய்கிற வேகம் இரு
மடங்காகிறது உனைக்
காணும்போதெல்லாம்.

146
என் கனவில் நீ
வருவதில்லை.
என் கனவே நீயாக விரிவதால்.

147
பேசி
புரிய வைக்கிறாய்
சில சமயம்
புரிய வைத்து பின்
பேசாமல் விடுகிறாய்.

><><><>< 

(படம்- நன்றி:கூகிள்)

6 comments:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான குறுங்கவிதைகள்! நன்றி!

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான கவிதைகள்
அதுவும் இறுதி வரிகள் கவிதைக்குத் தரும்
அழுத்தம் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு ரசனை...

ஒவ்வொன்றும் அழகு...

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள சகோதரர் எழுத்தாளர் ஜனா அவர்களுக்கு வணக்கம்! உங்களது (தமிழ்மணம்) வாசகர்களில் நானும் ஒருவன் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இருந்தும் பல வலைத்தளங்களில் என்னால் முன்புபோல கருத்துரைகளை எழுத முடிவதில்லை; படிப்பதோடு சரி.

நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

தங்களின் வலைத்தளத்தினை இன்று (21.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

நினைவில் நிற்போர் - 21ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/21.html

Thulasidharan V Thillaiakathu said...

ஷார்ட் அண்ட் ஸ்வீட்,....

ஸ்ரீராம். said...

மலர்களுடனான ஒரு வித்தியாசம் கூட தெரியவில்லையா? அட...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!