134
நாலு நாளை ஓட்டி விட்டேன்
நீ பேசிய
நாலே வார்த்தைகளைக் கொண்டு.
135
சிந்திவிட்டுப் போனாய்
ஒரு புன்னகை..
மந்திரித்து விட்டாற்போல் நான்.
136
உனக்கு விழி.
எனக்கு வழி.
137
இனிமேல்தான் கண்டுபிடிக்கணும்,
என் போல் சிரத்தையாய்
சுற்றுகிற கிரகத்தை.
138
ரொம்பவே வெயிட் போட்டுவிட்டேன்
என்கிறார்கள்.
என்ன செய்ய முடியும்?
உன் நினைவுகளைக் கீழே
இறக்கி வைக்க முடியாதே?
139.
எனக்குத் தெரிந்ததெல்லாம்
மன்னிக்கவும், தெரிவதெல்லாம்
நீ
நீ
நீ.
140.
நான் உன்னை நேசிப்பது அதிகமா,
என்னோடு சேர்த்து
இந்த உலகை நீ
நேசிப்பது அதிகமா?
><><><
8 comments:
அனைத்துமே அருமை. அதிலும் 135, 137 ரொம்பவே பிடித்தது.
வணக்கம்
ஐயா
இரசனைக்கு விருந்தாக உள்ள வரிகள் பகிர்வுக்கு நன்றி த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிமேல்தான் கண்டுபிடிக்கணும்,
என் போல் சிரத்தையாய்
சுற்றுகிற கிரகத்தை.
ஆகா அருமை நண்பரே
தம +1
கனமான நினைவுகளை ரசித்தேன்...
;இனிக்கும் துண்டுகள்!
"ரொம்பவே வெயிட் போட்டுவிட்டேன்
என்கிறார்கள்.
என்ன செய்ய முடியும்?
உன் நினைவுகளைக் கீழே
இறக்கி வைக்க முடியாதே?"
- என்ற பின் நவீனத்துவக் கவிதை வரிகள் எனக்குப் பிடிக்கின்றன! - இராய செல்லப்பா
இனிக்கும் கவிதைகள்
அனைத்தையும் ரசித்தோம்....138 ரொம்பப் பிடித்தது...
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!