Tuesday, June 23, 2015

நல்லதா நாலு வார்த்தை...49


'முன்னேறிச் செல்வதன் ரகசியம் 
செல்லத் தொடங்குவது.'
- Mark Twain
('The secret of getting ahead is 
getting started.')
<>

’எத்தனை மெதுவாக நகருகிறாய் 
என்பது முக்கியமில்லை 
நீ நிற்காத வரையில்.’
- Confucius
('It does not matter how slowly you
go as long as you do not stop.')
<>

’யாரேனும் ஒருவரின் மேகத்தில் ஓர் 
வானவில்லாக இருக்க 
முயற்சி செய்.’ 
- Maya Angelou
('Try to be a rainbow in someone's cloud.')
<>

'இன்னொரு இலக்கை நிர்ணயிப்பதற்கோ
இன்னொரு கனவைக் காண்பதற்கோ
ஒருபோதும் வயதாகிவிடவில்லை உனக்கு.'
- C. S. Lewis
('You are never too old to set another goal
or to dream a new dream.')
<>

முகம் தரை பட விழுந்தாலும்
முன்னேறிச் செல்கிறாய் அப்போதும்.
- Victor Kiam
('Even if you fall on your face, 
you're still moving forward.')
<>

’ஆனந்தத்தின் ரகசியம்
அன்றாட வாழ்க்கையின் 
அனைத்து விவரங்களிலும்
அப்பழுக்கற்ற அக்கறை கொள்வதில்
அடங்கியிருக்கிறது.’
- William Morris
('The true secret of happiness lies in taking
a genuine interest in all the details of daily life.')
<>

’விஷயங்களை நீ பார்க்கும் 
விதத்தை மாற்றினால்
நீ பார்க்கும் 
விஷயங்கள் மாறும்.'
- Wayne Dyer
('If you change the way you look at things, 
the things you look at change.')
<><><>
(படம்- நன்றி: கூகிள்)

8 comments:

ரிஷபன் said...

நல்லதா நாலு வார்த்தை எப்போதும் காதில் விழுந்து கொண்டே இருக்க வேண்டும்..

ரிஷபன் said...

யாரேனும் ஒருவரின் மேகத்தில் ஓர்
வானவில்லாக இருக்க
முயற்சி செய்.’ // அருமையான வார்த்தை

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அனைத்தும் அருமை சகோ

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அருமையாக உள்ளது இரசித்தேன் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

அருமையான மொழிபெர்யர்ப்பு.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

எத்தனை மெதுவாக நகருகிறாய்
என்பது முக்கியமில்லை
நீ நிற்காத வரையில்.’

ஆகா அருமை
நன்றி நண்பரே
தம=1

திண்டுக்கல் தனபாலன் said...

வயதை நினைத்தாலே பிரச்சனை தான்...

அனைத்தும் அருமை...

ராமலக்ஷ்மி said...

அருமையான பொன்மொழிகள்.

/’விஷயங்களை நீ பார்க்கும்
விதத்தை மாற்றினால்
நீ பார்க்கும்
விஷயங்கள் மாறும்.'-/ உண்மை.

தமிழாக்கத்திற்கு நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!