
ஒரு நெடு நாள் சிநேகிதி போல
அந்த விற்பனைப் பெண் என்னிடம்
நிறையப் பேசினாள்.
என் நிறுத்தத்தில்
காலியிருக்கைகளுடன் பஸ்
உடனே வந்து நின்றது.
விலை அதிகமெனினும்
படிக்க விரும்பிய புத்தகம்
நண்பரிடம் படிக்கக் கிடைத்தது.
டி.வியில் அந்த புதுப்படம்
பார்த்து முடிக்கும் வரை
யாரும் கதவைத் தட்டவில்லை.
என்றாலும் ஈதொன்றும்
அன்றிரவு நான் அமர்ந்து
கவிதை எழுதுகையில்
நினைவுக்கு வரவில்லை.
6 comments:
அதுவே நல்லது. வாழ்த்துக்கள்
aahaa:))
ஒரே வார்த்தையில் பாராட்டலாம்.
"பிரமாதம்"
நினைவுக்கு வராததே அழகிய கவிதையான போது, வந்திருந்தால்... அற்புதமான கவிதையாகி இருக்கும். நல்ல கவிதை.
ஆமாம்.. நாம் எவ்வளவு சுலபமாய் மறந்து போகிறோம்.. நல்ல கருத்து.. அழகான கவிதையாய்..
nalla irukunga . regards
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!