சுகுமாருக்கு சந்தோஷத்தால் மனம் நிறைந்திருந்தது. அவன் ஆசைப்பட்ட மாதிரியே அந்தப் பதவி உயர்வு கிடைத்துவிட்டது. கடும் போட்டிக்கிடையில் வெற்றி அவனுக்கு.
''இத்தனை இளம் வயதில் இந்தப் பதவியை அடையக் கொடுத்து வெச்சிருக்கணும் சார் நீங்க!'' என்று கை குலுக்கினார் ஒரு சக அதிகாரி. மச்சம், முகராசி என்று அவன் காதுபடவே பேசினவர்களையும் கடந்து செல்ல நேர்ந்தது.
பாராட்டு விழாவில் அவனோடு கலந்து கொண்ட மனைவி ராஷ்மி வீட்டுக்கு வந்ததும் கேட்டாள்: ''என்னங்க, நீங்க ரொம்ப லக்கின்னு எல்லாரும் சொல்றாங்களே, அதுக்கு நீங்க ஏதும் பதிலே சொல்லலியே?''
அமைதியாகச் சொன்னான். ''அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான், விடு. நாலு வருஷம் முந்தி நான் பிராஞ்ச் மானேஜரா எங்க எம்.டியைச் சந்திச்ச போது அந்த வருஷம் போதுமான பர்ஃபாமான்ஸ் காட்டலேன்னு என்னை வறுத்து எடுத்திட்டாரு அவர். சாதிக்காமல் மேலே வர முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டு இன்னும் நல்லா உழைச்சேன். அதனால இது முழுக்க முழுக்க என் உழைப்புக்குக் கிடைத்த வெகுமதின்னு எனக்கு நல்லாவே தெரியும். இதைப் புரிஞ்சுக்கலேன்னா அவங்க அவங்களையே ஏமாத்திக்கிறாங்கன்னு அர்த்தம்! அதைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும்.''
(குமுதம் 19-05-10 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)
7 comments:
உழைப்பை ... அதிர்ஷ்டமாக்கும் மக்கள்..
ம்...
இதுதான் உலகமோ?
சுபெர்ப் ஜனா:) அருமை.
உழைப்பே வெற்றிதரும். நல்ல கருத்துள்ள கதை
உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெகுமதி!
உழைத்தால் தான் உயர்வு கிடைக்கும் என்பதை அழகா சொல்லி இருக்கீங்க சார்.
dear ஜனா,
ஜூன் 5 குமுதம் கதையை வன்ணத்தில் கண்டு very happy
இ.பீடம் ஜூன் இதழில் பக்72_78 வாசிக்கவும்
malauthandaraman
VERY GOOD
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!