அம்மா உன் முகம் நாங்கள்
அறியாததல்ல.
அன்பே அதன் வடிவம்.
எப்போதும் அதிலொரு
அனுசரணை.
'என்ன நடந்தால் என்ன,
என்னிடம் சொல்லு!'
ஆறுதல் அதன் பின்னே,
'நானிருக்கேன் கண்ணே.'
அப்பாவை எப்போதும்
சீரியசாகவே
நினைக்க முடிகிறது. ஆனால்
அம்மாவை அப்படியல்ல.
அதுதான் அம்மாவோ?
எத்தனை சத்தம் போட்டு
நீ திட்டினாலும்
அத்தனை சீரியசாய்
அது பட்டதேயில்லை.
அடி மனத்தை ஒரு நாளும்
தொட்டதேயில்லை.
ஆனால் நீ
அலுத்துக்கொண்டு சில சமயம்
எங்களிஷ்டத்துக்கு விட்டு
'எப்படியோ போங்கள்!'
என்று சொல்லும்போது தான்
வேற்று முகம் காட்டுகிறாய்.
நாங்கள் அறியாத
ஏற்றுக்கொள்ள முடியாத
வேற்று முகம்.
வேண்டாம் அம்மா
அந்த வேற்று முகம்!
7 comments:
//ஆறுதல் அதன் பின்னே,
'நானிருக்கேன் கண்ணே.'//
யதார்த்தத்தை அருமையாக உணர்த்திய ரசித்த வரிகள். மதர்ஸ் டே-க்கு பொருத்தமான கவிதை. பாராட்டுகள்.
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)
அனேகருக்கு அம்மா இப்படித்தான் அம்மா:) Nice
அழகு அம்மாவுக்கு, அருமையாக ஒரு கவிதை.
அம்மா கோபித்தால் தாங்காது தான்
//ஆனால் நீ
அலுத்துக்கொண்டு சில சமயம்
எங்களிஷ்டத்துக்கு விட்டு
'எப்படியோ போங்கள்!'
என்று சொல்லும்போது தான்
வேற்று முகம் காட்டுகிறாய்.//
'எப்படியோ போங்கள்!' என்று அம்மாவே அலுத்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் அசத்தா?
'அம்மா’ அப்படியே என்னை பழைய நாட்களுக்குக் கொண்டு போய் விட்டது..
அம்மாவின் வேற்று முகம் நம்மால் தாங்க முடியாதுதான்..
'எப்படியோ போங்கள்' எந்தப் பக்கமும் போக முடியாமல் கட்டிப் போடும் அன்பு அவஸ்தை.
அம்மாவுக்கு நல்ல கவிதை.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!