Wednesday, May 12, 2010

துணை'' பாருங்க ஊர்லே உலகத்திலே நடக்காததை நான் சொல்லிறலை. நீங்களா நாளைக்கு யோசிச்சு வரப்போற முடிவைத்தான் சொல்றேன். ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். வீட்டுக்கு வந்தா குழந்தையைப் பார்த்துக்கவே டயம் பத்தலே. இதுக்கிடையிலே உங்கம்மாவை எப்படிப் பார்த்துக்கறது?'' முடிவாகச் சொல்லிவிட்டாள் சாரதா.

''இல்லே சாரதா, அம்மாதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்னு சொல்றாளே,'' என்ற சேகரைப் பேசவே விடவில்லை. அதெல்லாம் எப்படி நைச்சியமாகப் பேசி கணவனைக் கைக்குள் போட்டுக்கொண்டு புகுந்த வீட்டில் காரியத்தைச் சாதிக்கணும்கிறது அவளுக்கு அத்துப்படி.

இந்த வெற்றியைத் தன் அம்மாவிடம் பறை சாற்றத் துடித்தாள்...

''சேகரா, நீயா என்னை முதியோர் இல்லத்திலே...'' உருக்குலைந்து போனாள் அவன் அம்மா தேவகி.

''உன் சவுகரியத்தையும் மனசிலே வெச்சுத்தாம்மா ஏற்பாடு பண்ணியிருக்கோம், பொறுத்துக்க... மேடம், நல்லா கவனிச்சுக்குங்க.''

''இங்கே எனக்குத் துணைக்கு யாருடா இருக்கா?''

''அதெல்லாம் பழகிப் போயிடும்மா... அடுத்த வாரமே வந்து பார்க்கிறோம்.'' புறப்பட்டார்கள்.

டுத்த வாரம் ஆபீசிலிருந்து மனைவியை பிக் அப் செய்தபோது...
''வா, அப்படியே விடுதியில் எங்கம்மாவைப் பார்த்துட்டு வந்துடலாம்!'' என்று அழைத்தான்.

பிரகாசமான முகத்தோடு வந்தாள் அம்மா. கலகலப்பாய் பேசினாள். ''அட, ஒரு வாரத்திலேயே மனசைத் தேற்றிக் கொண்டு விட்டாளா?'' விழித்தான் சேகர்.

''துணைக்கு ஆள் கிடைச்சிட்டுதுடா!''

''யாரும்மா?''

அழைத்து வந்து நிறுத்தியவளைப் பார்த்து அதிர்ந்தாள் சாரதா. ''அம்மா நீயா?''

''நானேதாண்டி! என்ன சொல்லியும் கேட்காம உன் மாமியாரை இங்கே கொண்டுவந்து விட்டதை அறிஞ்சேன். மனசு பொறுக்கலே எனக்கு. அதான் பேசாம நானும் உங்கண்ணன்கிட்ட சொல்லிட்டு இங்கேயே வந்து சேர்ந்திட்டேன் அவங்களுக்குத் துணையா!''


(குமுதம் 14-03-2005 இதழில் வெளிவந்த என் ஒரு பக்கக்கதை)

12 comments:

Rm Ramanathan said...

Let everyone put themselves in other shoes and do the right things! This story is realy thought provoking!

வானம்பாடிகள் said...

Arumai.

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை.

venky said...

Very very ....... Impressible

அநன்யா மஹாதேவன் said...

அருமை. இதுக்கு பேர் தான் Empathy!! சூப்பர்.
எல்லா பெண்ணைப்பெத்தவங்களும் கெட்டவங்களாவா இருப்பாங்க? சில நல்லவங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க. :)) அழகா வந்திருக்கு கதை.

ரிஷபன் said...

எதிர்பாராத முடிவு..

நிலாமதி said...

கதை அருமை , வித்தியாசமான முடிவு. வாழ்த்துக்கள்.

padma said...

நல்ல கதை .நச் முடிவு

DREAMER said...

நல்ல கதைங்க..!

-
DREAMER

ஜெஸ்வந்தி said...

நல்ல கதை

KALYANARAMAN RAGHAVAN said...

அருமையான படிப்பினை கதையை படிக்க உங்களின் மூலம் எங்களுக்கு கொடுப்பினை.

ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

c.p.senthilkumar said...

psycologically touching story sir

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!