இரவுக்கு வலிக்குமென்று எல்லா
விளக்குகளையும் அணைத்துவிட்டேன்.
விளக்குகளையும் அணைத்துவிட்டேன்.
இதமாய் அது பூமி மேல் படர்கையில்
அதன் இருளுக்குப் பங்கம் வரக்கூடாது.
அது தடவி செல்லட்டும்
வெம்மையையும் வேர்வையையும்.
என் தோட்டத்து விருட்சங்களை
குளிர்விக்கட்டும்.
பதித்துச் செல்லட்டும் அது தன்
தண் பாதங்களை!
பதமாய் சூழும் இருள் என்
பார்வையை சற்று நிறுத்தி
சிந்தனையைத் தூண்டட்டும்!
அதன் இருளுக்குப் பங்கம் வரக்கூடாது.
அது தடவி செல்லட்டும்
வெம்மையையும் வேர்வையையும்.
என் தோட்டத்து விருட்சங்களை
குளிர்விக்கட்டும்.
பதித்துச் செல்லட்டும் அது தன்
தண் பாதங்களை!
பதமாய் சூழும் இருள் என்
பார்வையை சற்று நிறுத்தி
சிந்தனையைத் தூண்டட்டும்!
11 comments:
அருமை வாழ்த்துக்கள்
//பதமாய் சூழும் இருள் என்
பார்வையை சற்று நிறுத்தி
சிந்தனையைத் தூண்டட்டும்!//
நல்ல சிந்தனை. கவிதை அருமை.
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)
கவிதை மிகவும் அழகாக இருக்கிறது தோழரே...
விளக்கை அணைத்து விட்டீர்கள் ஆனால் உங்களின் கவிதையின் வெளிச்சத்தில் இருள் பிரகாசிக்கிறதே..
இரவுக்கு வலிக்குமென்று எல்லா
விளக்குகளையும் அணைத்துவிட்டேன்.
......அட...... அசத்தல் வரிகள்....... !!!
இருளுக்கும் இதமான வரவேற்பு.. அதற்கு வலிக்கக் கூடாது என்று நினைக்கும் நல்ல மனசு.. நேசம் வெளிப்படுத்தும் அழகான கவிதை..
“இரவுக்கு வலிக்குமென்று எல்லா
விளக்குகளையும் அணைத்துவிட்டேன்”
ஆஹா...ஆஹா....இது....இது...கவிதை.
பல்லவி அற்புதம்
இயற்கையை மயில்பீலீயாக
கேசமும் கலைக்காத வர்ணனை!
ஜனா நினைத்ததை சொல்லிருக்கிறார்
சிந்தனையைத் தூண்டியிருக்கிறார். .
மனம்தொடும் வரிகள்
கவிதை எழுத வேண்டும் என்ற எனது ஏக்கத்தை அதிகரித்த ஒரு கவிதை!
ரொம்ப நல்ல சிந்தனை ஒரு நல்ல கவிதையாக வந்துள்ளது. நல்லா இருக்கு சார்.
ரொம்ப ரொம்ப அழகான வரிகள் ஜனா. I luved it. :)
அருமையான கவிதை
super
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!