''என்னங்க, இன்னிக்கு நம்ம பையனையும் மருமகளையும் போய்ப் பார்த்துட்டு வரணும்னு சொல்லிட்டிருந்தீங்களே?'' நினைவூட்டினாள் மனைவி. ''ஆமாமா,'' என்று கிளம்பினார் சொக்கலிங்கம் மாம்பலத்துக்கு.
அங்கே சாப்பிட்டுவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
''நேரமெல்லாம் எப்படிப் போகுதுப்பா?'' கேட்டான் விஷால்.
''அதான் நீ வாங்கிக் கொடுத்திருக்கியே ஒரு கம்ப்யூட்டர், நல்ல உபயோகமா இருக்கு. பொழுது பறக்குது!''
அப்போது விஷாலின் கம்ப்யூட்டரில் ஒரு பாப் அப் எழுந்து, ''டைம் டு விசிட் வருண்,'' என்று ரிகார்டட் வாய்ஸ் விட்டுவிட்டு ஒலித்தது. ''ஓ!'' என்றபடியே அதை 'கிளிக்'கி நிறுத்தினான்.
''பார்த்தீங்களாப்பா, நீங்களும் இப்படி உங்க கம்ப்யூட்டரில் முக்கியமான விஷயங்களை நினைவூட்ட ஏற்பாடு செய்துக்கலாம். கரெக்டா அதை அதை அப்பப்ப சொல்லிடும். எப்படி செட் பண்றதுன்னு சொல்லித் தரட்டுமா?''
''வேணாம்பா. என்னதான் கரெக்டா நினைவூட்டினாலும் அது ஒரு மெக்கானிகல் வாய்ஸ். உங்கம்மா, 'என்னங்க, சாயந்தரம் கோயிலுக்குப் போகணும்னு சொல்லிட்டிருந்தீங்களே'ன்னு கனிவோட ஞாபகப்படுத்தற மாதிரி இருக்குமா?
''நல்லா சொல்லுங்க மாமா!'' என்றொரு குரல் பின்னாலிருந்து கேட்டது.
(குமுதம் 15-10-2008 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)
12 comments:
என்ன தான் உலகத்தையே புரட்டிப் போட்டாலும் இயந்திரம் இயந்திரம் தான் மனிதன் மனிதன் தான் என்று
யதார்த்தத்தை பிரதிபலிக்கும் நல்ல கதை.
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)
//''நல்லா சொல்லுங்க மாமா!'' //
Good finishing touch.
குமுதம் இதழில் வெளியான உங்கள் அருமையான கதைக்கும் அதில் சொல்லியுள்ள கருத்துக்கும் பாராட்டுக்கள்!
:)
அறிவியல் முன்னேற்றத்தால் என்னதான் செய்தாலும் அதில் ஒரு ”ஹோம்லி டச்” இருப்பதில்லை என்பதை சொல்லிய விதம் அழகு.
வெங்கட் நாகராஜ்
arumai :)
ஜனா ‘டச்’ !
ரொம்ப நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள் தொடருங்கள்...
என்னதான் இருப்பினும் இயந்திரம் இயந்திரம் தான் மனிதன் மனிதம் தான்....homely touch ..இதனால் தான் உண்மயில் உலகம் இயங்கு கிறது . அருமையான் பதிவு. வாழ்த்துக்கள்
பிரமாதம். நச்னு சொல்லியவிதம் அருமை!!
காலத்திற்கு ஏற்ற மையக்கரு.
குமுதத்தில், இப்ப இந்த மாதிரி கதைகளும் வருதா?
முன்பெல்லாம், அந்த மாதிரி கதைகள்தானே வரும்.
வாழ்த்துக்கள், ஜனா.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!