
வெளுத்த கிழக்கின் மேகங்கள்
லேசாய்ச் சிவந்து நீலப் பின்னணியில்
மஞ்சள் மாயம் காட்டி நிற்கிறது.
பனியின் கிடுக்கிப்பிடி உலுக்கிப் பின்
காலையின் புத்துணர்ச்சி பரவி
நெற்றியில் வேர்வை அரும்புகிறது.
உறவின் புறக்கணிப்பிலிருந்து மனம்
நேற்றைய நண்பர் சந்திப்புக்கு வந்து
படித்த வாழ்க்கைத் தத்துவத்தில் அமிழ்கிறது.
காட்சிகள் மாறிட
வாழ்க்கை நகருகிறது
எப்படியோ...
8 comments:
அருமை. பாராட்டுக்கள்!
நல்லா இருக்குங்க....
அதுதான் நம் வெற்றியின் இலக்கணம்.. படமும் க்விதையும் வெரி வெரி பாசிட்டிவ்..
சரிங்க
வழக்கம் போல.. அருமை :)
ARUMAI
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
நகரணும் .நகர்ந்தாதான் அது வாழ்க்கை .நல்லா இருக்கு
//பனியின் கிடுக்கிப்பிடி உலுக்கிப் பின்
காலையின் புத்துணர்ச்சி பரவி
நெற்றியில் வேர்வை அரும்புகிறது.//
ஒட்டு மொத்த வாழ்க்கையின் காட்சி மாற்றத்தை இதை விட அழகாக விளக்கியிருக்க முடியாது. அபாரமான கவிதை.
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!