Friday, June 11, 2010

அவனுக்காகவும்...


ங்கோ வெகு தொலைவில்
கணினி முன் அமர்ந்திருக்கும்
என் மகனும்
பசித்தெழும்போது
நான் விளைவிக்கிற
இதே போன்ற அரிசியைத்தான்
உண்ணுகிறான் என்பதை
நினைவுகூரும்போது என்
வியர்வை எங்கோ மறைந்துவிடுகிறது.
அயர்வு அகன்று விடுகிறது.
இன்னும் விளைவிக்க
வேட்கை ஏற்படுகிறது.

வெறுமை

ருமையைக்
கழுவ முடிகிறது.
வறுமையை?

6 comments:

Chitra said...

வெறுமை

எருமையைக்
கழுவ முடிகிறது.
வறுமையை?


...... ஆழமான அர்த்தம் உள்ள கேள்விதான்....

Rekha raghavan said...

1. இங்கிருந்து வாசித்து இன்புற்றேன் இக் கவிதையை.

2 . எருமை கவிதை அருமை.

ரேகா ராகவன்.
(now at Los Angeles)

ரிஷபன் said...

இரு கவிதைகளுமே மனதைத் தொட்டன..

கமலேஷ் said...

வெறுமை கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க...
வாழ்த்துக்கள்...
தொடருங்கள்...

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு கவிதைகளும் அருமை சார். ”அவனுக்காகவும்” கவிதை மனைதைத் தொட்டது.

ஹ ர ணி said...

அன்புள்ள ஜனா..

மனதைக் கசிய வைத்த கவிதைகள்.
வாழ்த்துக்கள். அன்புடன் உறரணி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!