Friday, June 25, 2010

எப்படி?


ணேஷை எல்லாரும் சூழ்ந்து கொண்டனர். ''எப்படிடா? எப்படிடா?''
எல்லார் வாயிலிருந்தும் ஒரே கேள்வி.

''ரெண்டு மணி நேரம் கெஞ்சிப் பார்த்தேன், ஸ்போர்ட்ஸ் குட்ஸ் விற்கிற கம்பெனி அது. ஸ்போர்ட்ஸில் அரை டன்னுக்கு சர்டிஃபிகேட் வெச்சிருக்கேன், என்னை ஏறெடுத்தும் பார்க்கலே. வேகன்சி இல்லவே இல்லேன்னு விரட்டிட்டாங்க! நீ எப்படிடா அந்தக் கம்பெனியில் வேலை வாங்கினே?'' -- ரகு.

''உன்னை விட ரெண்டு டிகிரி அதிகம் எனக்கு. என்னையே ஓரம் கட்டிட்டாங்க!'' -- கௌதம்.

புன்னகைத்தான் கணேஷ். ''நீங்க எல்லாரும் அங்கே போய் என்ன கேட்டீங்க?''
''எங்க தகுதியைச் சொல்லி ஏதாவது வேலை காலி இருக்கான்னு தான்!''

''நான் அப்படிக் கேக்கலே. 'சார், உங்க கம்பெனி ப்ராடக்ட்ஸ் எல்லாம் நல்ல தரமானதா இருக்கு. ஆனா, எங்க ஏரியாவிலே அதை ப்ரமோட் பண்றதுக்கு சரியான ஆள் யாரும் இல்லை, அதை நீங்க உடனே கவனிக்கணும்,' அப்படீன்னேன். உடனே, 'அதுக்கு நீங்க தயாரா'ன்னு கேட்டு இன்டர் வியூ பண்ணி எனக்கு வேலை போட்டுக் கொடுத்துட்டாங்க.''

''சாதுரியம்தான்!'' என்றது அவர்கள் பார்வை.

('நாணயம் விகடன்' Oct 1-2006 இதழில் வெளியானது)

10 comments:

Chitra said...

practical idea. :-)


('நாணயம் விகடன்' Oct 1-2006 இதழில் வெளியானத) - wow!
Thats very nice. Congrats!

பனித்துளி சங்கர் said...

சிறிதாக இருந்தாலும் சிறப்பான கதை . சித்திக்க வைத்தது . பகிர்வுக்கு நன்றி

Rekha raghavan said...

புத்தி சாதுர்யம் இருந்தால் எங்கேயும் ஜெயிக்கலாம் என்பதை நிரூபிக்கும் கதை.

ரேகா ராகவன்.
(now at Chicago)

பத்மா said...

ப்ராக்டிகலான கதை .நன்று

R.Gopi said...

புத்தி சாதுர்யம், சமயோசிதம் இவற்றை அழகாக விளக்கிய சிறிய கதை....

ரிஷபன் said...

சின்ன சின்ன கதையில் கூட உங்க சாதுர்யம் தெரிகிறது..

வெங்கட் நாகராஜ் said...

சின்னக்கதையில் ஒரு எம்.பி.ஏ. தத்துவம் - அழகு!

Riyas said...

good story..

க.பாலாசி said...

சாதுர்யம்தான்....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒரு சின்னக் கதையில் பெரிய தத்துவம்!!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!