''இத்தனை கரிச்சுக் கொட்டறியே உன் மாமியாரை, அப்படி என்ன பண்ணினாங்க?''
கேட்ட தோழியிடம் பொருமித் தள்ளினாள் கமலி, ''பின்னே என்ன, அவருக்கு நாலு நாள் புவனேஷ்வரில் ட்ரெய்னிங் வந்தது, எனக்கும் சேர்த்தது டிக்கட் போட்டிருந்தார். கடைசி நேரத்தில் எனக்கு அந்த ஊர் கோவில் பார்க்கணும்னு ஆசையா இருக்குடான்னு சொல்லி என் டிக்கட்டை கான்சல் செய்துட்டு அவரோட கிளம்பிட்டாங்க. அதான் எரிச்சல்ல இருக்கேன்.நாளைக்கே எங்கம்மாவைப் போய்ப் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்.''
அதே நேரம் ரயிலில்...
''என்னம்மா அண்ணாவோட ஒரிசா பயணமா?'' என்று செல்லில் கேட்ட மகளிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் கமலியின் அத்தை.
''அதுவா? கமலியோட அம்மாவுக்கு கொஞ்ச நாளா உடம்புக்கு முடியாம இருந்தது. போய் நாலு நாள் பார்த்துட்டு வரலாம்னு அவ கேட்டால் உங்கண்ணன் விட்டால் தானே? அதான் வலுக்கட்டாயமா நான் கோவிலுக்கு வரணும்னு சொல்லி டிக்கட்டை மாத்திடச் சொல்லி அவ ஊருக்குப் போயிட்டு வர்றதுக்கு ஒரு சந்தர்ப்பத்தை உண்டுபண்ணிக் கொடுத்திட்டேன்!''
( நன்றி : குமுதம் இந்த வாரம். )
11 comments:
கதை அருமை பகிர்வுக்கு நன்றி
கதை சூப்பர். பகிர்வுக்கு நன்றீ.
வாவ்...நல்ல ட்விஸ்ட்... நல்லா இருக்குங்க குட்டி கதை
நல்ல மாமியார் கதை! எழுத்தில் வேகம். அருமையான நடை. ரசித்தேன்
மாமியார்னா இவங்கதான் மாமியார். நல்ல கதை.
நல்ல கதை.... குமுதத்தில் வந்த இந்த கதைக்காக, உங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
sabash
எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம், கருத்துள்ள ஒரு கதை படிக்க!
ஒரு பக்கத்தில் மாமியாரின் இரண்டு பக்கங்களையும் காட்டிய விதம் அருமை.
ரேகா ராகவன்.
(now at Los Angeles)
குமுதத்தில் வந்ததா? நல்லா இருக்கு ஸார்!
ஜனாவின் எழுத்தில் உருவான
கதையின் கருத்து இல்லறத் தீர்வுக்கு
மிகவும் உதவும்.வெற்றி தொடர இனிய பாராட்டு
-மாலாஉத்தண்டராமன்
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!