பொசுக்கும் வெயிலில்
தகிக்கும் பாறைகள்,
வறட்சியில் வைக்கோலாகி
வாடும் வயல்கள்,
இல்லாத காற்றால்
அசையாத மரங்கள்,
மண்டிக் கிடக்கும்
குற்றுச் செடிகள்,
மேய்ந்து மாய்ந்து
தேய்ந்த மாடுகள்
எல்லாமே கண்ணுக்கு
அழகான காட்சியாக...
குளிரூட்டப்பட்ட காரின்
வண்ணக் கண்ணாடி வழியே
பார்க்கையில்!
(கவிப்பேரரசு வைரமுத்து தேர்ந்தெடுத்த கவிதைகள்
-- குங்குமம் 18-10-2007 )
8 comments:
யதார்த்தத்தை பிரதிபலிக்கும் அருமையான கவிதை.
ரேகா ராகவன்.
(now at Los Angeles)
(கவிப்பேரரசு வைரமுத்து தேர்ந்தெடுத்த கவிதைகள்
-- குங்குமம் 18-10-2007 )
... wow! very nice!
அருமை
//மேய்ந்து மாய்ந்து
தேய்ந்த மாடுகள்//
********
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்...
வைரமுத்து இந்த கவிதையை தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் என்ன!!??
கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது நண்பரே...வாழ்த்துக்கள்...
குளிரூட்டப்பட்ட காரின்
வண்ணக் கண்ணாடி வழியே
பார்க்கையில்!
இந்த கடைசி வரி சுள்ளென்று உறைக்கிறது..
நல்ல கவிதை நண்பரே!
தங்கள் மெயில் முகவரி தெரியாததால் உங்கள் வலையில் நுழைந்து எழுதுவதற்கு மன்னிக்க.
என் வலையில் கருத்துரையோடு நீங்கள் கேட்டிருந்த கேள்விக்கு விடை;
என் சிறுகதை 1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.
பெயர்;'ஓர் உயிர் விலை போகிறது'
தங்கள் அறிமுகம் கிட்டியமைக்கு நன்றி. தங்கள் எழுத்துப் பணிகள் பற்றியும் அறிந்து கொண்டேன்.
வாழ்க,வளர்க.
அன்புடன்,
எம்.ஏ.சுசீலா
http//www.masusila.blogspot.com
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!