Monday, April 6, 2020

ஒரே ஒரு புன்னகை...


’ஒரே ஒரு புன்னகை மட்டுமே
உன்னிடம் இருக்குமென்றால்
அதை நீ நேசிப்பவர்களுக்கு அளி.'
’பறவை பாடுவது அதனிடம் ஒரு 
பதில் இருக்கிறதென்பதால் அல்ல,
அதனிடம் ஒரு
பாட்டு இருக்கிறதென்பதால்.’
’உள்ளிருந்து ஒளிவிடும் சுடரை
மங்கிடச் செய்ய முடியாது எதனாலும்.’
’யாரேனும் ஒருவரின் மேகத்தில் ஓர்
வானவில்லாக இருக்க முயற்சி செய்.’ 
‘உங்களுக்கு நேருவதையெல்லாம்
கட்டுப்படுத்த உங்களால் முடியாது
ஆனால் அவை உங்களை
பாதிக்க விடுவதில்லை என்று தீர்மானிக்க
உங்களால் முடியும்.’
‘பட்டாம் பூச்சியின் அழகை ரசிக்கிறோம்
ஆனால் அந்த அழகை அடைவதற்கு
அது கடந்து வந்த மாற்றங்களை
எண்ணி ஏற்றுக் கொள்வதில்லை.'
...சொன்னவர் Maya Angelou. இன்று பிறந்தநாள்!
எழுத்தாளர், கவிஞர், பாடகி, சமூக மேம்பாட்டுக்காக உழைத்தவர்...
New York Times Best Seller லிஸ்டில் ரெண்டு வருடங்களுக்கு இருந்தது இவரின் ‘I Know Why the Caged Bird Sings’ என்ற புத்தகம். 
மூன்று முறை Grammy Award வாங்கிய இவர் பில் கிளிண்டன் பதவியேற்பு வைபவத்தில், தன் பாடலொன்றை வாசிக்கும் பெருமை பெற்றார். (‘On the pulse of the morning..’)
"சாப்பிடுவதும் பாட்டு கேட்பதும்போல எழுதுவதும் என் தினசரி வேலை...எழுதுவதைப் போல என்னைப் பயப்படுத்தும் விஷயமில்லை, அதைப் போல் திருப்திப் படுத்துவதும் வேறில்லை."

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான அருமையான வரிகள்...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!