Thursday, April 2, 2020

நடிக்காத நடிகர்...

எப்படியாவது நடிகர் ஆகணும்! ஒரே ஆசை. அட்வர்டைசிங் வேலையில் கிடைத்த சம்பளத்தில் அப்படியே நாடக டிக்கட் வாங்கினார். ஆக்டிங் கிளாஸில் சேர்ந்தால், உனக்கு நடிப்பு வராது என்கிறார்' வாத்தியார். ஆனால்  வருட இறுதிப் போட்டியில் பரிசு கொடுத்துப் பாராட்டினார் ஜட்ஜ். பிசியான நடிகரானார்... 

Alec Guinness! இன்று பிறந்தநாள்!

ஹாலிவுட்டின் ஒரு சில சிவாஜிகளில் ஒருவர். பாத்திரத்தின் உள்ளே புகுந்தார் என்றால் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுவார். முகத்தைவிட உடம்பு இன்னும் நன்றாக நடிக்கும் என்பார். சினிமாவைவிட நாடகத்திலேயே நாட்டம்.

வேண்டாம் வேண்டாம்னு  ரெண்டு தடவை மறுத்தார் அந்த Colonel Nicholson ரோலை. புரட்யூசர் Sam Spiegel விடாமல் நிர்ப்பந்திக்க, நடித்த அந்தப் படம், The Bridge on the River Kwai, ஆஸ்காரை வாங்கித் தந்தது. தொடர்ந்து பிரபல டைரக்டர் David Lean உடன் ஆறு படங்கள். அதிலொன்று Lawrence of Arabia. பத்து வருடம் பிரிட்டனின் பிரபல பத்து நடிகர்களில் ஒருவர். 1959-இல் 'ஸர்' பட்டம்.

Star Wars  படம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்களை அள்ளித் தந்தது, ஆனால் எரிச்சல்தான் இவருக்கு. பின்னே? அதற்குமுன் அத்தனையோ சாதித்தும் வரவில்லையே இத்தனை கடிதக் குவியல்! ஒன்றைக்கூட திறக்க விரும்பவில்லையாம். பட வசூலில் 2.25% இவர் சம்பளம். 1977-இல் மட்டுமே அது 9 மில்லியன் டாலர்! சீன் கானரியையும் மிஞ்சிவிட்டார், போங்கள்!

'The Fall of the Roman Empire.' மூர்க்கனான மகனை திருத்த முடியாமல் தவிப்பதும், அவனால் கொல்லப் படுவதுமாக நாலைந்து காட்சிகள்தாம், ஆனால் என்னவொரு ஸ்டைல்! 

Quote?
'தோல்விக்கு ஆயிரம் விளக்கம் இருக்கும்; ஆனால் வெற்றிக்கு விளக்கம் தேவையில்லை!'

'கொட்டகைக்கு சீக்கிரமே சென்று, மேக் அப் போட்டுவிட்டு, சக நடிகர்களுடன் சற்று நேரம் உரையாடிய பின் மெதுவே அந்த காரக்டருக்குள் புகுந்து கொண்டு, திரை விழும் வரையில் அந்தப் பாத்திரமாகவே வாழ்வது... ஆஹா எத்தனை ஆனந்தம்! அதுதான் வேண்டும் எனக்கு!'

><><><


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான தத்துவம்...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!