Monday, April 6, 2020

உயிர்ப் பறவை...


‘Quiz Kids’ என்ற பிரபல  ரேடியோ ஷோவில் வாங்கின பரிசை சிறுவன் ஜேம்ஸ் வாட்சன் செலவிட்டது பறவைகளைக் கண்டு ரசிக்க ஓர் பைனாகுலர் வாங்கத்தான்! அவன் ஆசைப்பட்டது பறவைகளைப் பற்றிப் படிக்கவே. புரட்டிப் போட்டது அவன் புரட்டிப் பார்த்த ஒரு புத்தகம்: ‘What is Life? The Physical Aspect of the Living Cell’. அதைப் படித்ததும், மரபணுக்களுக்கிடையே பொதிந்து கிடக்கும் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது.  விதி அவரை அதே ஜீன் ஆர்வம் கொண்ட மற்றொரு ஜீவனுடன், (Francis Crick) முடிச்சுப் போட்டது. 

ப்ரோட்டீன் தான் பல்கிப் பெருகும்  மரபணு என்றிருந்ததில் இவர்களுக்கு சந்தேகம். உடனிருக்கும் Deoxyribonucleic Acid, அதாங்க DNA, சும்மாவா உறங்குது?  ரெண்டு பேருமாக ஆராய்ந்து DNA வின் 'முறுக்கு ஏணி'(double helix) அமைப்பைக் கண்டு கொண்டனர். ஆறடி நீளமே சொந்தமடா என்று பில்லியன் கணக்கில் அடிப்படை ஜோடிகளை வைத்துக்கொண்டு ஒரு செல்லுக்குள் சுருண்டு கிடக்கும் DNA வின் முதல் மாடலை வடிவமைத்தனர். எப்படி அது தன்னைப் பெருக்கிக் கொள்கிறது என்பதையும்! நாம ஏன் நாமா இருக்கிறோம்னு நாம தெரிஞ்சுக்கிட்டோம். வாவ்! 

இவர்கள் இருவருக்கும் இன்னொருவருக்குமாக நோபல் வழங்கினார்கள்.
  
பறவை என்றால் உயிர் என்றிருந்தவர் உயிர்ப் பறவையின் சிறகுகளைக் கண்டறிந்த கதை இது.

James Watson  இன்று பிறந்த நாள்!

1 comment:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!