Tuesday, April 28, 2020

அவரவ்ர் கோணம்...


‘அவருடைய கோணத்திலிருந்து யோசித்துப்
பார்த்தாலொழிய நீங்கள் ஒருவரைச்
சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.’

‘அதை இழந்து விடுவோமோ என்ற பயம்
தோன்றும் வரை நான் வாசிக்கவில்லை.
சுவாசிப்பதை நேசிப்பவர் எங்கே இருக்கிறார்கள்?’

‘உரிச்சொற்களைக் களைந்து விட்டால்
உண்மைகள் கிடைத்து விடும்.’

‘கண்ணுக்குத் தோன்றுகிற அளவுக்கு
மோசமானதல்ல விஷயங்கள்.’

‘சரியாய் யோசிக்கிறவர்கள் தங்கள்
திறமையில் பெருமை கொள்ள மாட்டார்கள்.’

‘ஒருவர் தன் விரோதிகளை கண்டனம் செய்யலாம்,
ஆனால் அவர்களை நன்கு அறிந்து கொள்வது
இன்னும் விவேகமானது.’

சொன்னவர் Harper Lee... ஏப்ரல் 28. பிறந்தநாள்!

Gregory Peck நடித்த, 3 ஆஸ்கார் வாங்கிய அற்புதப் படம், ‘To Kill A mocking Bird’ நினவிருக்கிறதா? அந்தப் புலிட்சர் பரிசு நாவலை எழுதியவர். வருடத்துக்கு 10 லட்சம் விற்றதோடு 40 மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. தவிர, அவர் எழுதிய ஒரே நாவல் ‘Go Set A Watchman.’

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தகவல் பகிர்வுக்கு நன்றி. ஒவ்வொரு நாளும் சிறப்பான ஆளுமைகள் குறித்து எழுதும் உங்கள் பதிவுகள் தொடரட்டும்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!