Friday, April 3, 2020

நா(வ)லில் ஒருவர்...


ஒரு நண்பர் அந்த எழுத்தாளருக்கு போன் செய்தார். 'அவர் புது நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார்,' என்று பதில் கிடைத்தது.
'பரவாயில்லே, காத்திருக்கிறேன்!' என்றாராம் அந்த நண்பர்.
அவர் Edgar Wallace! 
அவர் காலத்தில் இங்கிலாந்தில் வாசிக்கப்பட்ட நாலு புத்தகத்தில் ஒன்று அவருடையது. மட்டுமா? மிக அதிகமாக (160) படமாக்கப்பட்ட நாவலாசிரியர்களில் ஒருத்தர். எழுதிய 170 நாவலுமே பெஸ்ட் ஸெல்லர். பிரபல 'King Kong' படத்துக்கு ஸ்க்ரிப்ட் இவர்தான்.
எழுதிக் குவித்தார். ரெண்டு செக்ரட்டரிக்கும் மூணு டிக்டேஷன் மெஷினுக்கும் ஒரே சமயத்தில் நாவல், நாடகம், கதை என்று நடத்திக் கொண்டிருப்பார். One man writing machine அப்படீம்பாங்க. 72 மணி நேரத்தில் ஒரு நாவல் எழுதிடுவார்.
கிரைம் ரிப்போர்ட்டராக வேலை பார்த்ததாலோ என்னவோ, உண்மைகளோடு ஒட்டி உறவாடியதால், தன் கதைகளில் பிளாட், ஃபார்முலா என்றில்லாமல் பல கோணங்கள், பல பாத்திரங்கள், பல மனப்பாங்குகள் என்று பிரமாதப் படுத்தியிருப்பார்.
1890 -களில் ஆப்பிரிக்காவிலிருந்து கட்டுரைகளை பிரிட்டனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தபோது தவறுதலா வேறொரு பத்திரிகைக்கு சென்றுவிட்டது ஒரு கட்டுரை. அவங்களுக்கு பிடிச்சுப் போச்சு. அவங்க வாங்கி பிரசுரிக்க ஆரம்பிக்க, அந்த The Daily Mail இல் எடிட்டரானபோது சம்பளம் அப்போதே 4000 டாலர்!
‘The Four Just Men’ அவரே வெளியிட்ட நாவல்! அட்டையில்: 'சுவையான ஒரு கதையைத் படிப்பதோடு முடிவில் யார் கொலை செய்தது என்பதைக் கண்டு பிடித்து படிவத்தை நிரப்பி அனுப்புபவர்களுக்கு மொத்தப் பரிசு 500 பவுண்ட்!' 
துணை நடிகை அம்மாவால் பாராமரிக்க முடியவில்லை.. ஆதரித்த தம்பதி தத்தெடுக்க அங்கே அக்கா க்ளாராவின் ஊக்குவிப்பில் வளர்ந்தவர். வேலைக்காக அலைந்தபோது..கப்பலில் சமையல் வேலை தெரியும் என்று ஏறியவர் தவறை உணர்ந்து அடுத்த கரையில் இறங்கி லண்டனுக்கு வழி நடந்த நாட்கள் முப்பது. 
நிறைய சம்பாதித்தார். இன்னும் நிறைய செலவழித்தார். கடைசியில் விட்டுப் போனதென்னவோ கடன் தான்.
><><

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

72 மணி நேரத்தில் ஒரு நாவல்! வாவ்...

தகவல்கள் சிறப்பு. தொடர்கிறேன்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!