ஓராயிரம் கவிதைகளைத் தம்முள்
ஒளித்து வைத்துக்கொண்டு
ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக
என் முன் குறுக்கும்நெடுக்குமாக
வலம் வருகின்றன வார்த்தைகள்
காதலின் பாரம் அவற்றின் நடையில்
சொல்லொணா கனத்தை
ஏற்றி வைத்துள்ளது.
இன்னும் அழகின் சாரம்,
வாழ்க்கையின் கோரம்
என்று பல...
வழி விலக்கிக்கொண்டு நடக்கிறேன்
வழி விட்டாற்போல விலகி
அவை என்னைச்
சுற்றிவளைத்துக் கொள்கின்றன
சில சமயம் எனக்கு தோன்றுகிறது
விடுபட வேண்டாமென்று.
<<<<>>>
17 comments:
அருமையான கவிதை!
ம்ம்...என்னமோ நடக்குது போல!
வார்த்தைகளின் வலுவை அழகாக சொல்லிப் போகிறது கவிதை!
ஓராயிரம் கவிதைகளைத் தம்முள்
ஒளித்து வைத்துக்கொண்டு
ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக
என் முன் குறுக்கும்நெடுக்குமாக
வலம் வருகின்றன வார்த்தைகள்//
வார்த்தைகள் பற்றிய கவிதை அருமை.
//வழி விட்டாற்போல விலகி
அவை என்னைச் சுற்றிவளைத்துக் கொள்கின்றன//
அருமை. சுலபத்தில் விலகிடத்தோன்றாது தான்.
பாராட்டுக்கள்.
கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
//சில சமயம் எனக்கு தோன்றுகிறது
விடுபட வேண்டாமென்று.//
வார்த்தை என்ற கொடிக்கொம்பைப் பற்றாவிட்டால் மௌனம் என்ற இருலில் அல்லது நிராகரிப்பு என்ற் புதைகுழியில் விழ வேண்டுமோ என்ற பயமாக இருக்குமோ?
/ஓராயிரம் கவிதைகளைத் தம்முள்
ஒளித்து வைத்துக்கொண்டு
ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக
என் முன் குறுக்கும்நெடுக்குமாக
வலம் வருகின்றன வார்த்தைகள்/
அழகு.
/சில சமயம் எனக்கு தோன்றுகிறது
விடுபட வேண்டாமென்று./
எனக்கும் கூட:)! நல்ல கவிதை.
அருமையான கவிதை.
சுற்றி வளைக்கும் கவிதைகளுக்குள் வாழ்வதும் ஒரு வரம்தான். அருமை. பாராட்டுகள்.
சில சமயம் எனக்கு தோன்றுகிறது
விடுபட வேண்டாமென்று.
அப்படியே தோணட்டும்
எங்க்ளுக்கும் இதுபோன்ற நல்ல படைப்புகளைப்
படிக்கவேண்டும் என ஆசை இருக்காதா என்ன ?
மனம் கவர்ந்த பதிவு
Tha.ma 2
வணக்கம்!
// ‘’வழி விலக்கிக்கொண்டு நடக்கிறேன்
வழி விட்டாற்போல விலகி
அவை என்னைச்
சுற்றிவளைத்துக் கொள்கின்றன ” //
அன்பினாலே உண்டாகும் பாசவலை பற்றி சுற்றிச் சுழலும் வார்த்தைகள்
அட இப்படி கூட சொல்லலாமா கவிதை
///ஓராயிரம் கவிதைகளைத் தம்முள்
ஒளித்து வைத்துக்கொண்டு
ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக
என் முன் குறுக்கும்நெடுக்குமாக
வலம் வருகின்றன வார்த்தைகள்///
உண்மையான வார்த்தைகள்.... :) ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் எத்தனை கவிதைகள்....
நல் வார்த்தைகளை தன்னுள் கொண்ட கவிதை படித்து ரசித்தேன்....
வழி விட்டாற்போல விலகி
அவை என்னைச்
சுற்றிவளைத்துக் கொள்கின்றன
சில சமயம் எனக்கு தோன்றுகிறது
விடுபட வேண்டாமென்று.
நல்லா இருக்கு..
nantragathan erukirathu
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!