அம்மா இடும் மாவில்
அத்தனை சுவையான சப்பாத்தி பிறப்பது
அன்பும் சேர்த்து பிசையப்படுவதால் இருக்குமோ?
அப்பாவின் திட்டு விழுந்தது
அடுத்த நாளே மறந்து விடுவது
அக்கறையும் சேர்ந்து விழுவதால் இருக்குமோ?
அக்கா பின்னித் தந்த ஸ்வெட்டர்
எக்காலக் குளிரையும் தாங்குவது
பாசம் அதில் பின்னிக் கொண்டதால் இருக்குமோ?
தம்பி மழலையில் மிழற்றிய குட்டிக் கதை
மனசை நனைத்துக் கொண்டிருப்பது
ஆர்வமழையென பொழிந்ததால் இருக்குமோ?
நண்பன் வாங்கித் தந்த டீ
ஆறி இருந்த போதும் அடி நெஞ்சில் இனித்தது
ஆறுதலும் அதில் அடங்கியிருந்ததால் இருக்குமோ?
பாட்டி சொன்ன பழமொழி
பார்த்தா எளிதாயிருந்தாலும் மறக்காதது
அனுபவமும் அதில் சேர்த்தி என்பதாலோ?
<><><>
17 comments:
அருமையான சிந்தனை. அழகான கவிதை சார்.
ஆம், அன்பு, அக்கறை, பாசம், ஆர்வம் ஆறுதல், அனுபவம் எல்லாமே பகிரப்படுவதால் அதில் கிடைக்கும் சுகமே அலாதியானது தான்.
அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.
அன்பு இழையோடும் பாசக் கவிதை.
மிக அருமை.
வணக்கம்! அன்பினாலே உண்டாகும் இன்ப வலை குறித்து அனுபவமான கவிதை!
நல்ல அர்த்தம் கொண்ட இனிய கவிதை.
நீங்கள் எழுதும் கவிதை
எங்களுக்கு பிடிப்பது
அதன் அன்பு பொதிந்த
வார்த்தைகளினாலோ?
நீங்கள் எழுதும் கவிதை
எங்களுக்கு பிடிப்பது
அதன் அன்பு பொதிந்த
வார்த்தைகளினாலோ?
நல்லதொரு கவிதை
அட....அழகான வரிகளில் அன்பு, அக்கறை, பாசம், ஆர்வம், ஆறுதல் மற்றும் அனுபவம் வார்த்தைகளை கோர்த்து உண்மை பேசும் கவிதை - நன்றி வாழ்த்துக்கள்
ஆம், அன்பு, அக்கறை, பாசம், ஆர்வம் ஆறுதல், அனுபவம் எல்லாமே பகிரப்படுவதால் அதில் கிடைக்கும் சுகமே அலாதியானது தான்.
அன்பின் வடிவங்கள் அத்தனையும் இருப்பதால்தான் இந்தக்கவியும் இனிதாய் மனத்தை நிறைக்கிறதோ? அர்த்தமுள்ள அழகுக் கவிதைக்குப் பாராட்டுகள்.
அழகான கவிதை. ரசித்தேன் சார்.
inru kungumathil ungkal kathai paditheen.
inru kungumathil ungkal kathai paditheen.
ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த கவிதை!
/அப்படியும் இருக்குமோ.../அப்படியேதாங்க இருக்கும்!:)
அழகான கவிதை!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!