குளித்து முடித்து ஈர டவலை
நனைத்துப் பிழிந்து உலர்த்துவதிலும்
தண்ணீரில் விழுந்து தத்தளிக்கும்
எறும்பைப் பிடித்து வெளிவிடுவதிலும்
கிளினிக்கில் அடுத்த நோயாளியிடம்
சில வார்த்தை விசாரிப்பதிலும்
இலக்கின்றி அரைக் கிலோமீட்டர்
எங்கோ வெளியில் நடப்பதிலும்
என்னமாய்ப் பொதிந்து கிடக்கிறது
வாழ்க்கையின் அர்த்தங்கள்!
<<<>>>
10 comments:
வாழ்க்கையின் அர்த்தங்கள் அழகாய் பதுங்கியுள்ளது உங்களின் கவிதையில். அருமை.
வாழ்க்கையின் ஒவ்வொரு செயலும் அர்த்தம் நிறைந்தவையே. அருமையான கவிதை.
வாழ்க்கையில் சில அர்த்தமுள்ள விஷயங்கள் தான்.
பகிர்வுக்கு நன்றிகள்.
பொதிந்து கிடக்கும் அர்த்தங்கள்.... நல்ல பகிர்வு.
ஒவ்வொரு நிகழ்வையும் உற்று நோக்குவதிலும்
உணர்வை தூண்டிட கவிதை ஆக்குவதிலும்
இவ்வகைக் கவிதை எழுந்தது வியப்பே
இனிய பொருள்தர அமைந்தது செழிப்பே
அருமை!
புலவர் சா இராமாநுசம்
உண்மைதான் வாழ்க்கையின் அர்த்தங்கள் எங்கெல்லாமோ தான் புதைந்து கிடக்கின்றன.
வாழ்கையே ஒரு அர்த்தமுள்ள விடயம் தானே
அழகாக சொல்லுது கவிதையும் - பகிர்வுக்கு நன்றி
என்னமாய்ப் பொதிந்து கிடக்கிறது
வாழ்க்கையின் அர்த்தங்கள்!
உங்களின் கவிதை அருமை
கவிதை அருமை சார்.
ஒவ்வொன்றிலும் வாழ்க்கைக்கான அர்த்தங்கள் பொதிந்து தான் கிடக்கின்றன.
கிளினிக்கில் அடுத்த நோயாளியிடம்
சில வார்த்தை விசாரிப்பதிலும்//
உண்மை உண்மை.
மருத்துவரை பார்க்க காத்திருக்கும் நேரம் அடுத்த நோயாளியிடம் விசாரிப்பதும் அர்த்தம் பொதிந்தது தான்.
நல்ல கவிதை.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!