குளித்துவிட்டு அவசரமாக வெளியே வந்த லலிதா கணவனிடம் முறையிட்டாள்.
''பாருங்க, இன்னிக்கும் ஆரம்பிச்சுட்டாங்க அந்தப் பசங்க. கத்தல் தாங்கலே!''
அவள் கோபம் பரசுவுக்கு புரிந்தது.
பக்கத்துக்கு வீட்டு பசங்களுக்கு லீவு விட்டது முதல் இப்படித்தான். கேட் முன்னால கூடி ஒரே சத்தம், ஆரவாரம், லூட்டி தான்.
என்னதான் இரண்டு பேருமே வேலைக்குப் போகிறவர்கள் என்றாலும் காலையிலேயும் மாலையிலேயும் காது கொள்ளாது. இன்னும் ரெண்டு மாதம் அவங்க ரகளைதான்
''இன்னிக்காவது ஆபீஸ் புறப்படறப்போ அவங்களை ரெண்டு வார்த்தை கண்டிச்சு வையுங்க.'' சொல்லிவிட்டு அவசரமாக அவள் முதலில் புறப்பட்டுப் போய்விட்டாள்.
மாலையிலும் அதே சத்தம், ஆரவாரம்.... பரசு இன்றைக்கும் வாயைத் திறக்கவில்லை என்று தெரிந்தது.
''என்னங்க, இப்படி நாம கண்டுக்காம இருந்தா என்ன நினைப்பாங்க அவங்க? இன்னும் துளிர் விட்டுப் போகாதா?''
அவளை அமைதிப் படுத்திவிட்டு சொன்னார் பரசு.
''நானும் கண்டிக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா யோசிச்சுப் பாரு. இப்ப தான் நாம ரெண்டு பேரும் ஆபீசில் நிம்மதியா இருக்கிறோம். 'வீட்டைப் பூட்டிட்டு வந்திருக்கோமே, தெருவில ஈ, காக்கை நடமாட்டம் இருக்காதே, எவனாவது உள்ளே புகுந்திடுவானோன்னு ஒரு கவலை மனசுல ஓடிட்டே இருக்குமே! அதிலேர்ந்து நமக்கு விடுதலை தர்றதுக்காகவாவது இந்தப் பசங்களோட ஜாலி கத்தலை மன்னிச்சுடுவோமே?''
லலிதா புன்னகைத்தாள்.
<<<>>>
(சென்ற வார 'குங்குமம்' இதழில் வெளியானது )
13 comments:
எதிலும் ஒரு பாசிட்டிவ் அப்ரோச் பார்க்கும் உங்களுக்கு!
எனக்கு உங்களிடம் பிடித்ததும் அதுவே.
நல்ல கதை. எந்தவொரு விஷயத்திலும் நல்லது கெட்டது இருக்கும்! நல்லதை மட்டுமே எடுத்துக்கொண்டால் நல்லது :)
இந்த சத்தம் எனக்கு பிடிச்சிருக்கு!
எங்களையும் புன்னகைக்கு வைத்தது பரசுவின் சமாதானம். அருமையான கதை.
வித்தியாசமான சிந்தனை
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
எந்தச் செயலிலும் ஒரு நன்மை உண்டு என்பதை அழகாகச் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.
அன்னப்பறவை போல்
வாழ்ந்திட உரைக்கும்
அழகிய கதை...
இடைஞ்சலிலும் நல்லதைக் கண்டுபிடிக்கும் தன்மை!
நல்ல சிறுகதை!!
மாத்தி யோசிக்கிராங்க போல இருக்கு. இதுவும் நல்லாதான் இருக்கு.
நல்ல லாஜிக் அண்ட் அப்ரோச் சார்
எல்லாம் நன்மைக்கே!
கத்தலும் நன்மையே.
அருமையான கதை.
இந்த சத்தம் தேவையானது தான்.....
நல்ல கதை.
’சத்தம்’ நல்லது
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!