Sunday, January 31, 2010

கண்டதே காட்சி!




சந்தித்த இடங்களிலெல்லாம்
சம்பாஷித்து மகிழ்ந்தார்கள் மனிதர்கள்.
சந்திப்பதற்கென்றே
சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அது ஒரு காலம்...
இப்போது
எல்லாமே காட்சியாக விரியவேண்டும் அவர்களுக்கு.
சில சமயம் மெகா சீரியல் காட்சியாக.
எனவே இப்போதெல்லாம்
கவிதைகளில் மட்டுமே
பேசிக் கொள்ளுகிறார்கள் மனிதர்கள்.


ஒரு நிமிடம்...

முகம் கண்டே ஒதுங்கி விடுகிறார்கள்.
நிலை அறிந்தால் நெருங்கத் தயங்குகிறார்கள்.
அப்படி உன்னிடம் நான்
என்ன யாசித்துவிடப் போகிறேன்?
அப்படி எனக்குத் தந்துவிடத்தான்
உன்னிடம் என்ன உளது
வெறும் பணத்தைத் தவிர?
உன்னிடமிருந்து பெறும் எதுவுமே என்
சோகத்தைத் துடைத்து விடப் போவதில்லை
உன்னுடன் பகிர்தலைத் தவிர!

8 comments:

ரிஷபன் said...

// கவிதைகளில் மட்டுமே
பேசிக் கொள்ளுகிறார்கள் மனிதர்கள். //

அப்படியாச்சும் பேசிக்கறாங்களே..

// உன்னுடன் பகிர்தலைத் தவிர //
ஆஹா !

பின்னோக்கி said...

கவிதைகள் அருமை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பகிர்தல் விலை மதிப்பில்லாதது போலும்!!

R.Gopi said...

கண்டதே காட்சி... கொண்டதே கோலம்...

இது இங்கு அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது..

//உன்னிடமிருந்து பெறும் எதுவுமே என்
சோகத்தைத் துடைத்து விடப் போவதில்லை
உன்னுடன் பகிர்தலைத் தவிர!//

அருமை..... வாழ்த்துக்கள் சார்....

Unknown said...

அருமையான கவிதைகள்.

கே.ஆர்.ஏ

கே. பி. ஜனா... said...

Natarajan,C said:
Nice one I enjoyed very much.

புதுவை சந்திரஹரி said...

அருமையான கவிதைகள் . தொடரட்டும்
வாழ்த்துகள் .
- புதுவை சந்திரஹரி

புதுவை சந்திரஹரி said...

அருமை யான கவிதைகள் . தொடரட்டும்
வாழ்த்துகள் .
- புதுவை சந்திரஹரி

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!