Friday, January 22, 2010

கொடி அசைந்ததும்...



'கொடி அசைந்ததும்காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?' பாட்டைக் கேட்கும் போது அதே போல் சில கேள்விகள் மனதில் எழாமலில்லை. சிலவற்றையாவது இதில் இட்டு பதில் தேட முயல்கிறேன்.


1. ஆடை குறைந்ததும் ஃபாஷன் வந்ததா, ஃபாஷன் வந்ததும் ஆடை குறைந்ததா?


2. பி.பி. வந்ததால் கோபம் வருகிறதா, கோபம் வருவதால் பி.பி. வந்ததா?


3.பத்திரிகை போரடித்ததால் டி.விக்கு மாறினார்களா, டி.வி.க்கு மாறியதால் பத்திரிகை போரடித்ததா?


4.எல்லாருமே கவிதை எழுதுவதால் கவிதை பாப்புலர் ஆனதா, கவிதை பாப்புலர் ஆனதால் எல்லாருமே கவிதை எழுதுகிறார்களா?


5. போர் அடிப்பதால் வேலைகளைத் தவிர்க்கிறோமா வேலைகளைத் தவிர்ப்பதால் போர் அடிக்கிறதா?


6.கதாநாயகன் பண்ணுகிற அசட்டுக் காரியங்களை சகிக்க முடியாததால் காமெடியனை அவர் என்ன செய்தாலும் ரசிக்கிறோமா காமெடியன் என்ன செய்தாலும் ரசிக்கும்படி இருப்பதால் க. நாயகன் பண்ணுகிற காரியங்களை சகிக்க முடியவில்லையா?


7. கிளையன்ட் ஏமாளியா இருக்கிறதால நாம புத்திசாலியாகிறோமா நாம புத்திசாலியா இருக்கிறதால கிளையன்ட் ஏமாளியாகிறாரா?


தெரிந்தால் சொல்லுங்களேன்...

8 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

:))

நல்லா யோசிக்கிறீங்க இதை இன்னும் தொடரலாம் அதை நான் பாத்துகிறேன்........

angel said...

i m the first

நாடோடி said...

பதில் கிடைக்கும் என்று போஸ்ட் பண்ணுணிங்களா. இல்ல போஸ்ட் பண்ணுணா பதில் கிடைக்கும் என்று நினைத்தீர்களா..

நல்லா இருக்கு......

ரிஷபன் said...

நான் கவிதை எழுதறதை கிண்டல் பண்ணலியே?!

CS. Mohan Kumar said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

பின்னோக்கி said...

சும்மாவே ப்ரியமுடன் வசந்த பிடிக்க முடியாது. இப்படி சூப்பரா ரோடு போட்டு அவர ஓட்டச் சொல்லிட்டீங்களே !! :)

விடை தெரியாத கேள்விகள் - அருமையான கடினமான பதிவு.

eniasang said...

யோசிப்பதால் எழுதுகிறோமா?
எழுதுவதற்காக யோசிக்கிறோமா என சிந்திதால் விடை கிடைக்கும் என்ப்து என்க்கு தோன்றிய பதில்.

தமிழ் said...

;)))))))

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!