Friday, January 15, 2010
கவன ஈர்ப்புகள்...
அந்தப் பாதை எங்கோ செல்கிறது
என் மனதைப் போலவே.
வளைவுக்கு அப்பால் என்ன இருக்கிறது
என்பது தெரியாது எனக்கு.
ஆர்வமோ வளைத்துப் போடமுடியாததாய்...
'இந்த வரை வந்தது போதும்,
இடத்துக்கு என்ன குறை?'
என்றிருக்க முடியவில்லை நிறைவாய்.
இதுகாறும் சேகரித்த நினைவுகளின் பலம் ஒருநாள்
இற்றுப் போய் விடக்கூடும்.
கசப்பான அனுபவங்கள் மேலும்
களைப்பேற்படுத்தி விடக் கூடும்.
இனிய ஆச்சரியங்களும் ஏன்
இருக்கக்கூடாது இதற்கப்பால்?
ஒன்று மட்டும் தெளிவாய்...
நான் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
நிற்குமிடங்கள் இளைப்பாற மட்டுமே.
அந்தப் பாதை எங்கோ செல்கிறது.
என் மனம் அதன் பின்னால் செல்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
//ஒன்று மட்டும் தெளிவாய்...
நான் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
நிற்குமிடங்கள் இளைப்பாற மட்டுமே.
அந்தப் பாதை எங்கோ செல்கிறது//
--------
நல்லா இருக்கு முடிவில் நீங்க சொன்னது...
நேரமிருப்பின் இங்கேயும் வருகை தாருங்கள்...
www.jokkiri.blogspot.com
www.edakumadaku.blogspot.com
//இனிய ஆச்சரியங்களும் ஏன்
இருக்கக்கூடாது இதற்கப்பால்?
ஒன்று மட்டும் தெளிவாய்...//
அருமையான கவிதை. தொடரட்டும் உங்கள் படைப்புகள்.
ரேகா ராகவன்.
//வளைவுக்கு அப்பால் என்ன இருக்கிறது
என்பது தெரியாது எனக்கு///
வரிகள் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறது....
தை திருநாள் வாழ்த்துக்கள்...
வாழ்க்கைப் பயணத்தை இந்த பாதையின் வழியே சொன்ன விதம் அருமை.
கவனத்தை ஈர்த்து விட்டீர்கள்.. கவிதை மொழியால்.. தொடரட்டும்..
மனதுக்குள் ஒரு மத்தாப்பு பூத்தது
தங்கள் கவிதையைப் படித்ததும்!
நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்
அருமை...!
அருமை நன்றி
best poem - chandrahari
வாழ்க்கையைப் புட்டுப் புட்டு வெச்சிட்டீங்ணா இந்தக் கவிதையில! :)
:)
நல்லாயிருக்குங்க
தெளிவான பார்வை.நிறைவான பயனம்.உங்கள் பாதை உங்களுக்கு எதிரில்............
தன் பாதை எதுவென தெர்யாவிடின்?
உங்கள் இந்தக்கவிதை, என் நண்பர்கள் பலருக்கு உந்துகோலாக இருக்கிறது தோழா. மிக்க நன்றி.
-- அன்புடன் அமுதன்.
ammu.universe@gmail.com
உங்கள் இந்தக்கவிதை, என் நண்பர்கள் பலருக்கு உந்துகோலாக இருக்கிறது தோழா. மிக்க நன்றி.
அன்புடன் அமுதன்.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!