ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர் அவன். அதிலும் பிராஜெக்ட் லீடர். கம்பெனியில் ராத்திரி ஒன்பது மணி வரை பிசியாக வேலை செய்துவிட்டு அலுத்துக் களைத்து வீடு திரும்பும் அவனை பத்துப் பாத்திரம் தேய்க்க அனுப்பி விடுவாள் ராஷ்மி.
''என்னங்க, தண்ணியிலே புழங்கறது என் ஸ்கின்னுக்கு சரிப்பட்டு வரலே! ராத்திரி மட்டும் பாத்திரங்களை நீங்க வாஷ் பண்ணிக் கொடுத்துடுங்களேன், பிளீஸ்!'' என்று நைசாக அவன் தலையில் கட்டிவிட்டாள் அந்த வேலையை. அவனும் மறுக்காமல் அத்தனையையும் இழுத்துப் போட்டுப் பளிச்சென்று தேய்த்து வைப்பான்.
கம்பெனியிலிருந்து அவன் எத்தனை லேட்டாக வந்தாலும் தேய்க்கவேண்டிய பாத்திரங்கள் அவனுக்காகக் காத்திருக்கும். கைலியைக் கட்டிக் கொண்டு புகுந்தான் என்றால் அடுக்களைக்குள் ஒரே தாம் தூம் தான். கரிசனத்துடன் அவள் தொங்க விட்டிருக்கும் ரேடியோவிலிருந்து எஃப். எம். கேட்டபடியே வேலையை முடித்து விட்டுத்தான் சாப்பிட உட்காருவான்.
வேலைக்காரி வழியாகக் கசிந்து விட்டது இந்த விஷயம். பக்கத்து ஃபிளாட்காரியும் ராஷ்மியின் சிநேகிதியுமான நான் இதை அவளிடமே ஒரு நாள் கேட்டு விட்டேன்.
கேட்டதும் ராஷ்மி கொஞ்சம் அசந்துதான் போனாள். பிறகு மெல்லச் சொன்னாள்...
''ஸாஃப்ட்வேர் கம்பெனி வேலையைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே? அதிலும் இவர் பிராஜக்ட் லீடர் வேறே. நாள் பூராவும் பரபரப்பா இருப்பாரு. மென்டல் டென்ஷன் ஜாஸ்தி. அது ரிலீசாகிறதுக்குத்தான் இப்படி ஒரு ஏற்பாடு. உண்மையில் இது மறைமுகமா ஒரு சைக்காலஜிகல் உதவிதான் அவருக்கு. பாத்திரங்களை அவர் இஷ்டப்படி உருட்டறதிலேயும் வெளுக்கறதிலேயும், நாள் முழுக்க அவர் மனசில் தேங்கியிருக்கும் டென்ஷன் எல்லாம் வடிஞ்சுடும். முன்னைவிட இப்பல்லாம் ரொம்ப ஃ ப்ரெஷ்ஷா, சந்தோஷமா வந்து சாப்பிட உட்கார்றாரு.''
பதிலைக் கேட்டு நான் அசந்துபோய் புன்னகைத்தேன்.
(விகடன் 09-10-2005 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)
9 comments:
கடவுளே எங்க வீட்டுல இந்த கதைய படிக்காம இருக்கனும் :)
சைகாலஜிகல் டச்சுல உங்களை யாரும் டச் பண்ணவே முடியாது!..
//பாத்திரங்களை அவர் இஷ்டப்படி உருட்டறதிலேயும் வெளுக்கறதிலேயும், நாள் முழுக்க அவர் மனசில் தேங்கியிருக்கும் டென்ஷன் எல்லாம் வடிஞ்சுடும்//
உண்மைதாங்க. வழக்கமா நாம செஞ்சுக்கிட்டு இருக்கிற வேலையிலிருந்து சற்றே மாறுபட்ட வேலையில் (அது பாத்திரம் கழுவுவதாக , துணி தோய்க்கறதாக,வீட்டை சுத்தம் பண்ணுவதாக இருந்தாலும்)நம்மை ஈடு படுத்திக்கொண்டோமானால் டென்ஷனும் போயிடும் வீட்டுக்கார அம்மாகிட்டே நல்ல பேரும் வாங்கிக்கலாம். நல்ல கருத்தை சொல்லி இருக்கீங்க.
"ராத்திரியில் காத்திருக்கும்" தலைப்பை படிச்சிட்டு பரபரப்பா படிக்க வந்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவனாக இருப்பேனோ?
ரேகா ராகவன்.
naalla than yosiopinga pola
தாமத வாழ்த்துக்கள் தலைவா!!
// தண்ணியிலே புழங்கறது என் ஸ்கின்னுக்கு //
எங்க ஸ்கின்னுக்கு தண்ணியில புழங்குறது தான் ரொம்ப ஒத்துவருது.
இன்னொரு குவாட்டர் கொண்டாப்பா.
இது தான் டெக்னிக்கா...
ஆபீசிலிருந்து களைத்துப் போய்
வந்த என்னை துணி தோய்க்க ச்
சொல்வாள், மனைவி. ஆபீஸ் டார்ச்சர் +
மனைவி மீதுள்ள கோபம் என்று
எல்லாமாக சேர்த்து, துணிகளை
ஆசை தீர அடித்து, தோய்த்து..
பிழிந்து..காயப்போட்டு விடுவேன்..
மறு நாள் என் மீது நடக்கும்
அத்தனை தாக்குதல்களுக்கும்...
நான் தயார்!
கதை நல்லா இருக்குங்க.
romba nalla erukku
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!