''அதைத்தான் நாலு நாளா யாரைப்பத்தி எழுதறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன். யாருமே ஞாபகம் வரமாட்டேங்கறாங்க..'' தலையைச் சொறிந்து கொண்டார்.
அவளும் யோசித்தாள்.
''ஏங்க, நம்ம ராமசாமியைப்பத்தி எழுதுங்களேன்.''
''ராமசாமியா, யார் அது?'' அவருக்கு நினைவில்லை.
''அதுதாங்க, உங்ககூட காலேஜில ஒண்ணாப் படிச்சதா சொல்வீங்களே?''
''அவனா? அவன் அப்புறம் என்ன ஆனான்?'' யோசித்தார்.
''ஏதோ சமூக சேவை நிறுவனத்தில் செயலாளரா இருக்கிறதா சொன்னாரே, ஒரு முறை?'' என்றவள் அவர் எப்பவோ எழுதிய ஒரு கடிதத்தைத் தேடி எடுத்துக் கொடுத்தாள்.
''ஒ, அப்ப ஜமாய்ச்சுரலாம்,'' என்றவர் உட்கார்ந்து ரெண்டு பக்கம் எழுதி, தலைப்பை மேலே எழுதினார்:
'என்னால் மறக்க முடியாத நபர்.'
(குமுதம் 04-06-2008 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)
6 comments:
புரிஞ்சுச்சு நல்லாருக்குங்க...
இப்படித்தான் சில பேர்.. சுபாவம்.. ம்ம்.. நையாண்டி இழையோட எழுதிய விதம் ரசனை..மறக்க முடியாத கதை..
சும்மா 'நச்'--ன்னு இருக்கு.
ரேகா ராகவன்.
தோழர் கே.பி அவர்களே
கதை நன்றாக இருக்கிறது
இன்னும் எழுதுங்கள்
ஆர்வத்துடன் ....அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்
அன்புடன் கிச்சான்
நல்லாயிருக்குங்க
அருமை
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!