''அசடு, நான் என்ன ஒன்பது வழியா கேட்டேன்? சொல்லு சட்டுன்னு.''
அவ சொல்லுமுன் அது என்ன பிரசினைன்னு...
எல்லாத்துக்கும் காரணம் இந்த ப்ளாக் சீசன் தான்! ஆபீசிலேர்ந்து அடுத்த வீடு வரை யாரைப் பார்த்தாலும் ஒரு ப்ளாக் திறந்து வெச்சு தினம் எழுதித் தள்ளிட்டிருக்காங்க, என்னைத் தவிர.
ரெண்டு மாசம் முந்தி ...எங்க கிராமத்துக்குப் போயிருந்தேனா, அங்கே ஒரு ரசமான அனுபவம். எங்க சித்தப்பா என்ன பண்ணினாரு பக்கத்து வீட்டில தண்ணி இறைக்கிற மோட்டாரை எப்படி ஷெட் போட்டு வெச்சிருக்காங்கன்னு எட்டிப் பார்த்திருக்காரு. அப்போது பார்த்தா அவங்க வீட்டுக்கு விருந்தாளியா வந்த பொண்ணு குளிச்சிட்டிருக்கணும்? அப்பால என்ன, வறுத்தெடுத்துட்டாங்க அவரை. விலாவில நல்ல அடி.
இதை காஷுவலா ஆபீஸ் நண்பரிட்ட சொன்னேன். அடுத்த நாளே அவர் 'விலா'வாரியா தன் ப்ளாக்கில அதை எழுதிட்டார். அவர் கொடுத்த டிஸ்க்ரிப்ஷன் வேறே அது என் சித்தப்பாதான்னு எளிதா தெரியற மாதிரி இருந்தது.
அப்புறம் நான் யார்கிட்ட கிராமத்தைப் பத்தி என்ன பேசும்போதும் 'அதுவா, படிச்சுட்டேனே'ன்னு சொல்றாங்க.
போன மாசம் ஒரு வெப் சைட்டில் ஒரு ஹிலாரியஸ் ஸ்டோரி படிச்சுட்டு நண்பரிடம் சொல்ல அது அன்னிக்கு சாயங்காலமே பப்ளிஷ் ஆயிட்டது அவர் ப்ளாக்கில. என்ன நிகழ்ச்சி யார்ட்ட சொன்னாலும் மறு நிமிடமே ஒரு பொருத்தமான படத்தோட கணக்கா கணினித் திரையில ஒளிருது..
வரவர எங்கே என்ன நடந்தாலும், அதை நாலு பேர்ட்ட பகிர்ந்துக்க முடியலே. சில சமயம் நான் ஆரம்பிக்கறதுக்குள்ள அந்த என் கதையை எனக்கே சொல்றாய்ங்க. என்ன கொடுமை சார் இது?
கடைசியில என் மனைவி அந்த ஒரு வழியை சொன்னாளோ பிழைத்தேனோ!
அவ சொன்ன மாதிரி நானே ஒரு பிளாகைத் தொடங்கிட்டேன்.
ஹி, ஹி, ஏதாச்சும் இன்ட்ரஸ்டான மேட்டர் இருக்கா சொல்லுங்களேன், கேட்போம்!
6 comments:
நல்ல கற்பனை. முடிவில் ஒரு பன்ச் வச்சீங்க பாருங்க அது சூப்பரோ சூப்பர்.
ரேகா ராகவன்.
நல்ல சுவாரசியமாக இருக்கிறது. இப்படி அலட்டினாலே போதும். மேட்டர் எல்லாம் வேண்டாம் .
வரவு நல்வரவாகட்டும்.
இயல்பான நகைச்சுவை.. முடிவில் சூப்பர் பஞ்ச்!
ஆஹா...
இந்த மாதிரி கூட ஆரம்பிச்சுட்டேளா??
ரொம்ப நன்னா இருக்கு... பேஷ்....
அனைத்தும் உண்மைதான்.
ஆளாளுக்கு பிளாக் பைத்தியம் புடிச்சி அலையறதை இப்படி வாரிட்டீங்களேண்ணா! நான் இப்பத்தான் ஒரு பதிவு எழுதி முடிச்சேன். முதல்ல இதைப் படிச்சிருந்தேன்னா இன்னிக்கு அதை எழுதியிருக்க மாட்டேன்! :)
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!