இரவின் நிஜ நடுக்கம்
சாமத்தின் முன்பே எழுகிறது
அஞ்ஞானத்தின் அளவுக்கேற்ப...
தனிமையின் உள் பயம்
வெகு சீக்கிரமே தொடங்குகிறது
அறியாமையின் அளவுக்கேற்ப...
முதுமையின் முக வாட்டம்
இளமையிலேயே தென்படுகிறது
பக்குவமின்மையின் அளவுக்கேற்ப...
வறுமையின் கோரப்பிடி
எளிதிலேயே இறுக்குகிறது
மென்மையின் அளவுக்கேற்ப...
வெறுமையின் விசுவ ரூபம்
விரைந்து வியாபிக்கிறது
புரியாமையின் அளவுக்கேற்ப...
6 comments:
//உங்கள் எழுத்தின் வலிமை
எங்களை ஆச்சரியப்பட வைக்கிறது
........... அளவுக்கேற்ப... //
//தனிமையின் உள் பயம்
வெகு சீக்கிரமே தொடங்குகிறது
அறியாமையின் அளவுக்கேற்ப..//
அருமையான கவிதையை படித்த திருப்தி.
ரேகா ராகவன்.
கவிதை விஸ்வரூபம் எடுக்கிறது
படைத்தவர் திறமைக்கேற்ப..
வாழ்த்துகள்.. நல்ல கவிதை..
கவிதையை ரசிக்க, முதல்ல புரிஞ்சுக்க தனி ஞானம் வேணும் போல்ருக்குங்ணா! எனக்குப் புரியவே மாட்டேங்குது. ஸாரி! கவிதைக்கு நீங்க வெச்சிருக்கிற படம் அழகா இருக்கு.
கவிதை நன்றாக இருந்தது.
உங்கள் கவிதை
உண்மையை உரைத்தது....
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!