அக்கறையாய் நான் தொடுக்கும்
இக்கவிதை நதிக்கு
அக்கரை நீ, இக்கரை நான்.
என்னையும் உன்னையும் தொட்டபடியே
எப்போதும் ஓடும்.
எத்தனை நீ தள்ளிப்போனாலும்
அந்த அகலத்தை
இட்டு நிரப்பிக்கொள்ளும்
கவிதைப் புனல் என்னிடம்.
ஆனால்
கடல் கொள்ளுமா அந்த
வெள்ளப் பெருக்கை?
எனவே விரைந்து வந்து விடு
உற்பத்தி ஸ்தானத்துக்கே.
ஒரு துளியாய் நாம்
ஒன்றாவோம்.
8 comments:
//எனவே விரைந்து வந்து விடு
உற்பத்தி ஸ்தானத்துக்கே.
ஒரு துளியாய் நாம்
ஒன்றாவோம்//
அருமையான காதல் வரிகள். மிக அற்புதமான ஒரு கவிதையை வாசித்த திருப்தி மனசுக்குள் எந்நேரமும்.
ரேகா ராகவன்.
வந்து விடு.... ஒரு துளியில் இணைவோம்...
ஆஹா.... இதுவல்லவோ காதல் சங்கமம்...
ஈருடல்... ஓருயிர்.... இணையும் அந்த சங்கமம்.. அங்கு உலகை மறக்கும் நிலை...
கவிதைப் புனலின் பிரவாகத்தில் நீராடி மகிழ்ந்தேன்
நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
நல்லாருக்கு ஜனா!
ungkal kavithai anaivaraiyum oru thuliyaai ornraakkum. vaalththukal
நன்றி ராகவன்!
நன்றி R.கோபி!
நன்றி ரிஷபன்!
நன்றி கிருஷ்ணா!
நன்றி பா.ரா.!
நன்றி சரவணன்!
நல்லாருக்கு ஜனா!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!