Wednesday, January 20, 2016

அவள் - கவிதைகள்


232
அவர்கள்
பேசிக் கொண்டிருக்கட்டும்,
நான் சற்று இளைப்பாறுகிறேன்.
நம் விழிகள்.

233
தொப்பென்று விழுந்தேன்
உன்னுடைய கனவிலிருந்து.

234
உன் வெட்கத்தைப் பிடுங்கி 
ஜேபிக்குள் மறைத்து வைத்து விட்டேன்
சற்று நேரத்துக்கு.

235
ஒரு வினாடி 
கண்ணை மூடட்டுமா?
உன்னைப் பார்த்து விடுகிறேன்.

236
தென்றலுக்கு 
இந்தப்பக்கம் நான்
அந்தப்பக்கம் நீ.

237
அதற்கப்புறம் 
எந்தச் சிலையையும் செதுக்கவில்லை
அந்தச் சிற்பி.

238.
மௌனத்தால் பேசுகிறாய்
பேச்சில் மௌனிக்கிறாய்.
><><

6 comments:

ரிஷபன் said...

அவளில்லாமல் சுவாரசியம் இல்லை

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாமே நல்லா இருக்குது. பாராட்டுகள்.

தொப்பென்று விழுந்தேன்
உங்களுடைய
’அவள் கவிதை 238 முடிந்த’
கனவிலிருந்து.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை...

கரந்தை ஜெயக்குமார் said...

மௌனத்தால் பேசுகிறாய்
பேச்சில் மௌனிக்கிறாய்.

அருமை நண்பரே

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.

”தளிர் சுரேஷ்” said...

சுவாரஸ்யமான குறுங்கவிதைகள்! நன்றி!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!