Saturday, January 23, 2016

நல்லதா நாலு வார்த்தை...62


'சந்தோஷமாயிருக்க 
ஒருவருக்கு பாதுகாப்பு வேண்டும்,
ஆனால் உற்சாகம் என்பது 
விரக்திக் குன்றுகளின் விளிம்பிலும் 
பூவாக உதித்திடக் கூடியது.’
- Anne Morrow Lindbergh
('For happiness one needs security, but joy can
spring like a flower even from the cliffs of despair.')
<>

’சாவின் பயம் நம்மை 

வாழ்வதிலிருந்து தள்ளி வைக்கிறது,
சாவதிலிருந்து அல்ல.’
- Paul Roud
(’The fear of death keeps us from living, not from dying.’)
<>

'செயத்தக்க ஏதேனும் 
செய்த ஒருவரைக் காட்டுங்கள் எனக்கு,
நான் உங்களுக்குக் காட்டுகிறேன் 
இடர்ப்பாடுகளை வென்ற ஒருவரை!'
- Lou Holtz
('Show me someone who has done something worthwhile,
and I'll show you someone who has overcome adversity.')
<>

'ஒடித்துப் போடுகிறது எல்லோரையும் 
இந்த உலகம்.
ஒரு சிலர் மட்டும் பின்னர்
பலமாகிறார்கள் 
ஒடிக்கப்பட்ட இடங்களில்.'
-Ernest Hemingway
('The world breaks everyone, and afterward,
some are strong at the broken places.')
<>

மனதின் மென்மைக்கு நிகரான 
வசீகரம் இல்லை.'
- Jane Austin
('There is no charm equal to tenderness of heart.')
<>

வெற்றித் தோற்றம்போல்
வெற்றி பெறுவதொன்றில்.'
-Christopher Lasch
('Nothing succeeds like the appearance of success.')
<>

’தனியாகப் பிறக்கிறோம் நாம்,
தனியாக வாழ்கிறோம், 
தனியாக இறக்கிறோம்.
நம் அன்பாலும் நட்பாலும் மட்டுமே
அந்தக் கணத்தில் 
நாம் தனியாக இல்லை என்ற
மாயையை உருவாக்க முடியும்.’
- Orson Welles
'We're born alone, we live alone, we die alone.
Only through our love and friendship can we
create the illusion for the moment that we're not alone.'

><><><

7 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மனதின் மென்மைக்கு நிகரான
வசீகரம் இல்லை.'//

:)

அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை. இரண்டாவது ரொம்பவே பிடித்தது.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பொன்மொழிகள்! பகிர்வுக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

வசீகரம் ரொம்பவே வசீகரம்...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

settaikkaran said...

நியாயமா இதெல்லாம் ஆட்டோவுக்குப் பின்னாலே எழுதி வைக்க வேண்டிய வாசகங்கள். அத்தனையும் உண்மை.

ராமலக்ஷ்மி said...

நன்றி. அனைத்தும் அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!