Monday, January 11, 2016

அவள் - கவிதைகள்


225
வெகு நேரம் என்னோடு
விழித்திருந்தன கவிதைகள்
உன் ஒரு ‘உம்’முக்காக.
><

226
அவசரக் குடுக்கை 
ஆக இருக்கிறேன் எப்போதும்
உன்னிடம் பேசுவதில்.
><

227
பறந்து திரிந்த 
உன் மீதான நினைவுகள் 
இதயக் கூடடைந்துவிட்டன
><

228
அவள் 
மெல்லச் சிரித்தாள்,
என்னை 
வேகமாக இழந்தேன்.
><

229
உனக்காகக் காத்திருக்கையில் 
விரிந்த கணங்களைக்
கணக்கிட்டால்
ஒரு மாமாங்கம் தாண்டுகிறது.
><

230
உனக்கும் எனக்குமேயான 
நினைவுகள்
ஒரு யுகத்துக்குப் போதுமாய்!
><

231
தூங்கிடும்போதும் 
நீங்கிடாத உன் சிறு
புன்னகை.

><><

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அவள் - கவிதைகள் அனைத்தும் அழகாக உள்ளன .... அந்த மேலே காட்டியுள்ள படத்தில் உள்ள ரோஜா போலவே !

பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

எல்லாம் நன்றாக உள்ளது.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

padmabysnap said...

:) nice

padmabysnap said...

வலது கை கோடுப்பதை இடது கை அறியாமல்...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
ரசித்தேன் நண்பரே

”தளிர் சுரேஷ்” said...

குறுங்கவிதைகள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

Yarlpavanan said...

2016 தைப்பொங்கல் நாளில்
கோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!