Friday, January 29, 2016

நல்லதா நாலு வார்த்தை - 63


'நல்ல பழக்கங்களுக்கு அடுத்தபடியாக
நாம் குழந்தைகளுக்கு அளிக்கும் 
மிகச் சிறந்த விஷயம்
நல்ல ஞாபகங்களே.'
- Sydney Harris
('The best things you can give children,
next to good habits, are good memories.')
<>

'தன்னை வெல்ல முடிகிற மனிதனை
எதிர் நிற்கும் ஆற்றல் 
எதற்கும் இல்லை.'
<>
- Louis XIV 
('There is little that can withstand a man 
who can conquer himself.')
<>

'நிச்சயமாக நம்புவதற்கு முதலில்
ஐயுறுதலுடன் ஆரம்பிக்க வேண்டும்.' 
- Stanislaus I
('To believe with certainty, we must begin with doubting.')
<>

'என்ன என் வாழ்க்கை, நான்
யாருக்கும் இனி 
உதவியாக இல்லையெனில்.'
- Goethe
('What is my life if I am no longer useful to others.')

<>

’வளர்ச்சியும் பலமும் 
வருவது
அடுத்தடுத்து முயன்று 
அரும்பாடு படுவதினாலேயே.’
- Napoleon Hill
(’Strength and growth come only through 
continuous effort and struggle.')
<>

'உங்கள் காயங்களை 
விவேகமாக
உருமாற்றிக் கொள்ளுங்கள்.’
- Oprah Winfrey
('Turn your wounds into wisdom.')
<>

’மிகச் சிறந்த கல்வியால் 
திறக்க முடியாத கதவுகளை
நற்குணங்கள் திறக்கும்.’
- Clarence Thomas
('Good manners will open doors 
that the best education cannot.’)

><><><><

7 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//'உங்கள் காயங்களை விவேகமாக உருமாற்றிக் கொள்ளுங்கள்.’ - Oprah Winfrey
('Turn your wounds into wisdom.') //

மிகவும் பிடித்துள்ளது. அருமை. அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

kankaatchi.blogspot.com said...

கல்வி என்பதே (கல்)கல் போன்று கடினமாக இருப்பவனை இளகிய மனமுள்ளவனாக ,இரக்க உணர்வு கொண்டவனாக இயலாதவர்களுக்கு உதவும் பண்பு கொண்டவனாக பிறர் இதயம் நோகாது சொற்களை பயன் படுத்துபவனாக தானும் இன்புற்று பிறரையும் மகிழ்விப்பவனாக மாற்றுவதே .

ஆனால் இன்று அது இல்லை. காசு இருந்தால்தான் கல்வி என்ற நோக்கில் செயல்படும் நிறுவனங்களாக கல்விக் கூடங்கள் மாறிவிட்டன அதிலிருந்து வெளியேறும் மாணவர்கள் இயந்திரங்களாக இருக்கிறார்கள். இயந்திரங்கள் அவைகளை பயன்படுத்தும் நபர்களைப் பொறுத்து செயல்படுவதுபோல் அவர்கள் மற்றவர்களின் கைப் பாவைகளாக மாறி அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பெரும் கேடு விளைவிப்பவர்களாக ஆகிவிட்டனர்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா தங்களின் பக்கம் கருத்து இடமுடியாமல் உள்ளது வேகமாக புதிய புதிய பக்கம் திறக்கிறது என்னவென்று பாருங்கள். பல நாள் இப்படித்தான்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

அதானே...? உதவியாக இல்லையெனில் என்ன வாழ்க்கை...?

ராமலக்ஷ்மி said...

அருமையான வாசகங்கள்!

Nagendra Bharathi said...

அருமை

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!