Thursday, June 28, 2012

தொலை நோக்கு




மிக மிக தொலை தூரத்தில்
மின்னிடும் நட்சத்திரத்தை,
பார்க்கும் கணத்தில்
இருப்பதல்ல பார்ப்பது
என்றாலும் நம்புகிறாய்.
அந்தக் கணத்திலும் அது
அங்கே இருக்கிறது என்று.

ஆயினும் அதிசயம்,
சற்றுமுன் நெகிழ வைத்த
உன் மீதான
என் அன்பு
இந்தக் கணமும் அங்கே இருப்பதை
ஏன் நம்ப மறுக்கிறாய்?

<<<>>>

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தொலைதூரத்திலுள்ள நட்சத்திரம் கண்ணுக்குத் புலப்படுகிறது.

ஆனால் கிட்டேயே உள்ள அன்பு கருத்துக்குத் புலப்படுவதில்லை.

உண்மை தான். நல்லாச்சொல்லியுள்ளீர்கள். அருமை.

Yaathoramani.blogspot.com said...

என் அன்பு
இந்தக் கணமும் அங்கே இருப்பதை
ஏன் நம்ப மறுக்கிறாய்?

அருமையான லாஜிக்
மனம் கவர்ந்த் கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 1

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை.

த.ம. - 2

Rekha raghavan said...

அன்பை பற்றிய கவிதை அருமை.

ரிஷபன் said...

அருமையான கவிதை..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள் சார் ! வாழ்த்துக்கள் !

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள கே.பி.ஜனா அவர்களே! அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. வேறு என்ன சொல்வது.

நிலாமகள் said...

நியாய‌மான‌ கேள்விதான்!

ஹ ர ணி said...

எளிமை. அற்புதம். அருமை ஜனா. அன்பை வெளிப்படுத்த எளிமைதான் எப்போதும் பாந்தமானது. அதை உணர்த்துகிறது கவிதை நல்ல உவமையால்.

vimalanperali said...

அது அப்படித்தான்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!