அன்புடன் ஒரு நிமிடம் 8.
அதற்காகத்தானே
சொன்னார்?
“”காலையில் என்ன
சண்டை அம்மாவோடு?” பரசு வந்ததும் வராததுமாக
கேட்டார் அப்பா.
‘’பச்சைத்
தண்ணீரில் குளிக்க சொல்றாப்பா.”
“ஏன் வெந்நீர்
என்ன ஆச்சு?”
“ஹீட்டரில் ஏதோ
பிரசினை. வேலை செய்யலே.”
“அப்ப காரணம்
இருக்கு. அப்புறம் என்ன?”
“அதுக்காக? பச்சைத் தண்ணியில. எப்படி... என்னால நினைச்சே பார்க்க முடியலே.”
“எதுக்காக
நினைக்கணும்? நேரா விஷயத்தைப் பண்ணிடவேண்டியதுதானே?”
“என்னப்பா
சொல்றீங்க?”
“யோசிச்சிட்டெல்லாம்
இருக்கப்படாதுன்னு சொன்னேன். அவ்வளவுதான்.”
“அது சரி.
அதுக்காக குளிர்ந்த தண்ணியில எப்படி... இது வரை நான் ஒரு தடவை கூட அதில
குளிச்சதில்லையே?”
“குட். இதுவரை
குளிச்சதில்லையா? அப்ப கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்!”.
வியப்போடு
பார்த்தான். தமாஷ் பண்ணுகிறாரா என்ன?
அவர் தொடர்ந்தார்.
“உன்னை
யார் குளிக்க சொன்னது? நான் சொல்ற மாதிரி செய். பக்கெட்ல
தண்ணியை நிரப்பிட்டு உட்கார். சொம்பில் முதல்ல கொஞ்சம் தண்ணியை எடு. கையில ஒரு
அள்ளு அள்ளி அதை முகத்தில தடவிக்க. குளிராது. ஏன்னா அது நீ அடிக்கடி செய்யறது
தான். அடுத்த அள்ளல் எடுத்து கைகளில தடவிக்க. குளிரும் ஆனா பொறுத்துக்க முடியும்.
அடுத்த அள்ளலை கால்ல தடவிக்க. அப்புறம் கழுத்தோரமா. அப்புறம் தோளில். அப்புறம் நெஞ்சில்... இப்படி தடவிக்க.
குளிரும். ஆனா பொறுத்துக்கவும் முடியும். அப்புறம் அதே மாதிரி ஒவ்வொரு விள்ளலா
எடுத்து மேலே ஒவ்வொரு இடமா தெளிக்கணும்.
இப்ப தண்ணீர் மேல கொஞ்சம் வழிஞ்சோடும். ஆனா இப்பவும் பொறுத்துக்க முடியும்.
இப்ப நிறுத்தி சோப் போடணும். தண்ணீரை கொஞ்சம் அதிகமா தெளிச்சு ஒவ்வொரு இடமா வழிய
விடறே. இப்ப குளிர் குறைஞ்சிருக்கும். அப்புறம் மெல்ல மெல்ல சொம்பிலேர்ந்து
தண்ணீரை கொஞ்சம் தாராளமா சாய்ச்சுக்கறே. இப்ப குளிர் அனேகமா மறைஞ்சிருக்கும். லேசா
தலையிலயும் விடலாம். இப்ப கொஞ்சம் சுகமா கூட இருக்கும். அப்புறம் எவ்வளவு தோணுதோ
அவ்வளவு ஊத்திக்க. அவ்வளவுதான். குளிச்சாச்சு. Try it for once. பிடிக்கலேன்னா விட்டுரு.”
மறு நாள். ‘’அப்பா, it works. நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன். கடைசியில
குளிர் சுத்தமா போயிடுச்சு. முழுசா நல்ல ஊத்தி குளிச்சேன். இனிமே எப்ப
தேவைப்பட்டாலும் பச்சைத் தண்ணீரிலேயே குளிக்கலாம் போல இருக்கு.”
“ஆல் ரைட். எப்படி
இது முடிஞ்சதுன்னு தெரியுதா?”
“நீங்க சொன்ன மாதிரி சின்ன சின்ன அளவில் வரிசையா
செஞ்சதினால இந்த கஷ்டமான விஷயத்தை செய்ய முடிஞ்சது,”
என்றவன் சொன்னான், “யோசிச்சுப் பார்த்தேன். எந்த
விஷயத்தையுமே இப்படி செய்ய முடியும்கிறதும் தெரியுது”
அதற்காகத்தானே
சொன்னார்?
<<<<>>>>
12 comments:
:)
Practical and nicely related to obstacles!
Greetings
Lali
http://karadipommai.blogspot.in/
“யோசிச்சுப் பார்த்தேன். எந்த விஷயத்தையுமே இப்படி செய்ய முடியும்கிறதும் தெரியுது”
Super spoon feeding even to a lazy person..
Nice quote.
அழகாக ஊட்டிவிட்ட உபதேசம்.
//“யோசிச்சுப் பார்த்தேன். எந்த விஷயத்தையுமே இப்படி செய்ய முடியும்கிறதும் தெரியுது”//
உணர்த்தப்பட்டதும் உணரப்பட்டதும். ;)
correct..
நல்ல தத்துவம்! அருமையான யோசனை! சா இராமாநுசம்
“நீங்க சொன்ன மாதிரி சின்ன சின்ன அளவில் வரிசையா செஞ்சதினால இந்த கஷ்டமான விஷயத்தை செய்ய முடிஞ்சது,” என்றவன் சொன்னான், “யோசிச்சுப் பார்த்தேன். எந்த விஷயத்தையுமே இப்படி செய்ய முடியும்கிறதும் தெரியுது//
அருமை அருமை
பகுதி பகுதியாகச் சாப்பிட்டால்
யானையைக் கூட எளிதாகச் சாப்பிட்டுவிடலாம்தானே ?
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
எந்த விஷயத்துக்கும் பொருந்தக் கூடிய தத்துவத்தை உணர்த்தியிருக்கிறீர்கள் எல்லோருக்குமே. அருமை.
அருமையாகச் சொல்லிட்டீங்க....
தொடருங்கள்..
அருமையான தத்துவம்ங்க!
நான் பச்சைத்தண்ணில குளிக்கையில் கண்ணை இறுக்க மூடிட்டு டபார்னு ஒரு கப் தண்ணிய எடுத்து ஊத்திருவேன், ஒரு பத்து செகன்ட் குளிர்ற மாதிரி இருக்கும், அவ்ளோதான்! அப்புறம் பழகிரும்! :))))))
உங்க தத்துவம் வாழ்க்கையின் நிறைய விஷயங்களுக்கு ஒத்துப்போகும், நான் சொல்வது ஒத்துக்குமான்னு தெரிலை! ;)
எளிமையான அதேசமயம் ஆழமான கதை ஜனா. படிக்க சுவையாக இருந்தது.
Nice to read!
Hats off to Jana Sir!
எந்த விஷயத்தையுமே இப்படி செய்ய முடியும்கிறதும்//
அப்பா என்றால் அறிவு!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!